பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! மார்ச் மாதத்தில் அடுத்தடுத்து 11 நாட்கள் விடுமுறை..!!

Holiday 2025

பொதுவாக மார்ச் மாதம் என்றாலே பள்ளி மாணவர்களின் மனதில் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். மார்ச் மாத தொடக்கத்திலேயே 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கிவிடுவதால், தமிழகம் முழுவதும் கல்வித் துறை பரபரப்பாக இயங்க தொடங்கும். பிப்ரவரி மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மார்ச் மாதத்தில் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு (1 முதல் 9-ஆம் வகுப்பு வரை) சுமார் 11 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வழக்கமான விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை சேர்த்தால் மட்டுமே இந்த மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இவற்றுடன் தமிழக அரசின் பொது விடுமுறைப் பட்டியலில் உள்ள சிறப்புத் தினங்களும் இணைகின்றன. அதன்படி, மார்ச் 19-ஆம் தேதி (வியாழக்கிழமை) தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி பண்டிகைக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது. மார்ச் 21-ஆம் தேதி (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து, மாத இறுதியில் மார்ச் 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமையன்று வருவதால் ஒரு கூடுதல் விடுமுறை ‘மிஸ்’ ஆகிவிட்டதாக மாணவர்கள் கருதினாலும், ஒட்டுமொத்தமாக 11 நாட்கள் ஓய்வு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

அரசு அறிவித்துள்ள இந்தப் பொது விடுமுறைகள் தவிர, அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்கள் மற்றும் விசேஷங்களை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறைகளை அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பங்குனி மாதத் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும் என்பதால், உள்ளூர் நிர்வாகத்தின் முடிவைப் பொறுத்து விடுமுறை நாட்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும். ஆனால், இத்தகைய உள்ளூர் விடுமுறைகளுக்குப் பதிலாக வேறு சில சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த 11 நாட்கள் விடுமுறை என்பது 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிகிறது. மார்ச் முதல் வாரத்திலேயே 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் தொடங்கிவிடுவாதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி வளாகங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேர்வுகள் இல்லாத இடைப்பட்ட நாட்கள் மட்டுமே படிப்பதற்கான விடுமுறையாகக் கருதப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More : முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு கடும் கட்டுப்பாடு..!! தமிழ்நாடு அரசு அதிரடி அரசாணை வெளியீடு..!!

CHELLA

Next Post

Breaking : வாரத்தின் முதல் நாளே ஷாக்..! ரூ.10,000 உயர்வு.. தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

Mon Feb 23 , 2026
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
jewel n

You May Like