Flash : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 23-ம் தேதி வரை நடைபெறும்.. அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு..!

assembly n

17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. தமிழ் தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது.. பொதுவாக கூட்டத்தின் இறுதியில் தான் தேசிய கீதம் பாடப்படும்.. ஆனால் சட்டப்பேரவையில் வழக்கத்திற்கு மாறாக கூட்டத்தின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாடப்பட்டது.


வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேக்கர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் சட்ட நடவடிக்கைகள் தொடரும்.. நதி நீர் இணைப்புக்கு தேவையான நடவடிக்கையை தவெக அரசு மேற்கொள்ளும். தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.. தமிழகத்தில் அகழாய்வு நடைபெறும் இடங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தவெக அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.. லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் தமிழக வெற்றி கழக அரசு உறுதியாக உள்ளது.. விவசாயிகளுக்கு ரூ.75,000 வரையிலான கூட்டுறவு பயிர்க்கடன் தமிழக வெற்றி கழக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தார்..

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 23-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்துவது என சபாநாயகர் தலைமையில் நடத்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் 23-ம் ஆம் தேதி வரை நடைபெறும்..

அதன்படி, 3 நாட்களும் ஆளுநர் உரை மீதான் விவாதம் நடைபெறும், இறுதியில் முதல்வர் பதிலுரை அளிப்பார்.. அதன்படி நாளை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் சனி, ஞாயிறு விடுமுறைப்பின் மீண்டும் திங்கள், செவ்வாய் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தொடரும்.. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் தகவல்..!

RUPA

Next Post

“38 நாட்களில் 126 பாலியல் குற்றங்கள்.. சிங்கப்பெண் சிறப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை..” இபிஎஸ் விளாசல்..!

Thu Jun 18 , 2026
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. இந்த உரையில் தவெக அரசுக்கு ஆளுநர் புகழாரம் சூட்டியிருந்தார்.. ஆளுநர் உரையை தொடர்ந்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான இபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட்ட அறிக்கையே ஆளுநர் உரையாக அமைந்துள்ளது.. ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு திட்டங்களோ அறிவிப்புகளோ இல்லை.. சட்டம் ஒழுங்கு […]
eps vijay n

You May Like