டோலிவுட்டின் மிகவும் பிரபலமான ஜோடியான, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஒருவழியாக தங்கள் திருமணத்தை அறிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக டேட்டிங் செய்து வந்த இருவரும், இந்த விஷயத்தில் எந்த விளக்கத்தையும் கொடுத்ததில்லை.. ரசிகர்களும் எவ்வளவு முயற்சி செய்தாலும், இந்த விஷயத்தில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் மௌனம் காத்து வந்தனர்..
விஜய் மற்றும் ராஷ்மிகா ஒரு வழியாக சமூக ஊடகங்களில் அவர்கள் தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். திருமண அட்டையை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்ட தம்பதிர், தங்கள் திருமண நிகழ்வை விரோஷின் திருமணம் என்று பெயரிடுவதாகக் கூறினர்.
விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் விரோஷின் திருமணம் குறித்து தெளிவுபடுத்தினார். “நாங்கள் எதையும் திட்டமிடுவதற்கு முன்பு, எதையும் செய்ய நினைப்பதற்கு முன்பு… ரசிகர்கள் அந்த வேலையைச் செய்கிறார்கள். இப்போது, திருமண விஷயத்தில் கூட, அவர்கள் எங்கள் ஜோடிக்கு அன்பாக பெயரிட்டுள்ளனர்.
“எங்கள் ரசிகர்கள் எங்களை விரோஷ் என்று அழைக்க விரும்புகிறார்கள். அதனால்தான் எங்கள் திருமண விழாவிற்கு ‘விரோஷின் திருமணம்’ என்று எங்கள் ரசிகர்களுக்காக பெயரிட்டோம்,” என்று விஜய் தேவரகொண்டா அறிவித்தார். இந்த அறிவிப்புடன், அவர்கள் ஒரு திருமண அட்டையையும் வெளியிட்டனர். இதை தொடர்ந்து இந்த ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன..
‘கீதா கோவிந்தம்’ படத்தில் முதன்முறையாக விஜய் தேவரகொண்டா ஜோடி சேர்ந்தனர்.. இவர்களின் நட்பு, ‘டியர் காம்ரேட்’ நேரத்தில் காதலாக மாறியது. இந்த படத்தில் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது.. மேலும் அவ்வப்போது விஜய் – ராஷ்மிகா டேட்டிங் தொடர்பான வதந்திகளும் பரவி வந்தது.. எனினும் தங்கள் உறவு குறித்து இருவரும் எந்த பதிலையும் அளிக்கவில்லை..
விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகா மந்தனாவும் பிப்ரவரி 26 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் அரண்மனையில் திருமணம் செய்து கொள்கிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த விழா நடைபெறும் என்று அறியப்படுகிறது. ஜெய்ப்பூரில் திருமண ஏற்பாடுகளை இந்த ஜோடி ஏற்கனவே உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிகிறது. அது மட்டுமல்லாமல், திருமணத்தை ரகசியமாக வைத்திருக்க அதிக அளவு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறியப்படுகிறது.
Read More : Breaking : வாரத்தின் முதல் நாளே ஷாக்..! ரூ.10,000 உயர்வு.. தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!



