Flash: யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து..! – தமிழ்நாடு அரசு உத்தரவு..

savukku shankar 2

தமிழக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி பேசப்பட்டு வரும் பெயர்களில் ஒன்றாக சவுக்கு சங்கர் உள்ளார். “சவுக்கு” என்ற பெயரில் இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் நடத்தி வந்த இவர் அரசியல் தலைவர்கள், காவல்துறை, அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வந்தார்.


அவரது பேட்டிகள் மற்றும் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வந்த நிலையில், அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் பெரிய விவாதங்கள் உருவாகி வந்தன. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சவுக்கு சங்கர் மீது மீது தமிழ்நாடு அரசு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது. பொதுமக்கள் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதாகவும், பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பதாகவும் கூறி அவர்மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டது.

குண்டர் தடுப்பு சட்டம் என்பது, ஒரு நபர் தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்குவதாக அரசு கருதினால், அவரை முன்கூட்டியே தடுப்புக் காவலில் வைக்க பயன்படுத்தப்படும் கடுமையான சட்டமாகும். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் மீது வேறு எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லாத பட்சத்தில், அவர் உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: சமீபத்திய ரயில் தீ விபத்துகள் நாசவேலையாக இருக்கலாம்.. இந்திய ரயில்வே சந்தேகம்..

English Summary

Gundas case against YOUTUBER Savku Shankar cancelled..! – Tamil Nadu government order..

Next Post

நாட்டு மக்களுக்கு மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்..! வங்கிக் கணக்கில் ரூ. 5 லட்சம்..! விவரம் இதோ..!

Wed May 20 , 2026
It appears that the Central Government is planning to increase the life insurance and accident insurance coverage amounts to Rs. 5 lakhs.
money 2

You May Like