கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நெடுமானூர், சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.. நில அதிர்வு உணரப்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்..
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நில அதிர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



