உலக கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக வளர்ந்து வரும் இளம் இந்திய பேட்டிங் நட்சத்திரமான வைபவ் சூர்யவர்ஷி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் விமர்சகர் நௌமான் நியாஸ் தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 வயதிலேயே ஐபிஎல் போட்டிகளில் அதிரடி சதம் அடித்து கவனம் ஈர்த்துள்ள சூர்யவன்ஷி குறித்து, நியாஸ் “இந்த பையன் தனது மட்டையில் செயற்கை நுண்ணறிவு (AI) சிப் வைத்திருக்கலாம்.. அவரது மட்டையை ஆய்வகத்தில் பரிசோதிக்க வேண்டும்; வாடா டோப்பிங் சோதனை செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த கருத்து சர்ச்சையாக பேசப்பட்டாலும், சூர்யவன்ஷியின் திறமைக்கு கிடைக்கும் பாராட்டாகவே பலரும் இதைப் பார்க்கின்றனர்.
மிக இளம் வயதிலேயே மணிக்கட்டு கட்டுப்பாடு, 360 டிகிரி ஷாட்கள் போன்ற திறன்களால் அவர் உலக கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்து மாபெரும் சாதனை படைத்த சூர்யவன்ஷி, அதற்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக 26 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து அதிவேக சதத்தை நெருங்கியிருந்தார்.
இந்த சீசனில் 8 போட்டிகளில் 357 ரன்கள் எடுத்துள்ள அவர், கேஎல் ராகுல், விராட் கோலி, அபிஷேக் சர்மா போன்ற முன்னணி வீரர்களுடன் ஆரஞ்சு காப்புக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார். முதல் 10 இடங்களில் பெரும்பாலும் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் சதம் அடித்ததுடன், U-19 உலகக் கோப்பையையும் கைப்பற்றியுள்ள சூர்யவன்ஷி, குறுகிய காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். அவரது தற்போதைய வளர்ச்சியை பார்த்தால், விரைவில் இந்திய தேசிய அணியில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Read more: கள்ளக்காதலனுடன் அந்த கோலத்தில் மனைவி.. கதவை பூட்டி ஊரையே கூட்டிய கணவன்..! அடுத்து நடந்த சம்பவம்..



