fbpx

எச்-1பி, எல்-1 விசா கட்டணங்கள் உயர்வு!… ஏப்.1 முதல் அமல்!… அமெரிக்கா அதிரடி!

இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான எச்-1பி,எல்-1 மற்றும் ஈபி-5 போன்ற பல்வேறு வகை குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா கடுமையாக உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எச்-1பி விசா என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா ஆகும். புதிய எச்-1பி விண்ணப்ப விசா கட்டணம், படிவம் I-129, 460 டாலரில் இருந்து 780 டாலர் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எச்-1பி பதிவு கட்டணம் 10 டாலரில் இருந்து 215 டாலராக ஆக உயரும். இது மட்டும் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும்.

எல்-1 விசாக்களுக்கான கட்டணம் 460 டாலரில் இருந்து 1,385 டாலர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர் விசாக்கள் என்று பிரபலமாக அறியப்படும் ஈபி-5 விசாக்கள் 3,675 டாலரில் இருந்து 11,160 டாலராக உயர்த்தப்படுவதாக அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

முகத்தில் உள்ள தேமல் உடனே மறைய எலுமிச்சம் பழத்தை இப்படி பயன்படுத்துங்க.!?

Mon Feb 5 , 2024
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாற்றங்களினாலும், உணவு பழக்க வழக்கங்களினாலும் நம் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக நம் தோலில் பல வகையான தோல் வியாதிகள் உருவாகின்றன. முக்கியமாக தேமல் என்பது நம் தோலில்  பூஞ்சைகள் தாக்குதலால் ஏற்படும் ஒரு வகையான நோய் பாதிப்பாக இருந்து வருகிறது. தேமல் நோய்க்கான காரணங்கள்: தேமல் நோய் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பாதிக்கிறது.  ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் […]

You May Like