Flash : வெள்ளி விலை ரூ.10,000 சரிவு.. ஆனால் தங்கம் விலை உயர்வு..! இன்றைய நிலவரம் என்ன?

gold silver price

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, ரூ.14,890க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,19,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ. 2.90 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!! மத்திய துணை ராணுவப் படை தமிழ்நாட்டிற்கு வருகை..!! தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு..!!

RUPA

Next Post

உங்கள் இடது கையில் வலி ஏற்பட்டால், அது மாரடைப்பின் அறிகுறியா..? இதய நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

Tue Feb 24 , 2026
உடலில் உள்ள பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய சில அறிகுறிகளும் எச்சரிக்கை அறிகுறிகளும் உள்ளன. அவற்றைப் புரிந்துகொண்டு முன்கூட்டியே சரியான சிகிச்சையை எடுத்துக் கொண்டால், உடல்நலப் பிரச்சினையை குணப்படுத்த முடியும். இதனால், சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ளன. அவற்றில் ஒன்று இடது கை வலி, இது மாரடைப்பின் அறிகுறியாகும். இது மாரடைப்புக்கு முன் தோன்றும் அறிகுறிகளில் ஒன்றாகும். மேலும், இந்த அறிகுறியை அங்கீகரிப்பது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் […]
shoulder pain

You May Like