Flash : மீண்டும் ஷாக்.. ஒரே நாளில் ரூ.5,000 உயர்வு..! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

gold jewelry reflective surface 640852 1749

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.14,930க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,19,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ. 2.95 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : ஜெயலலிதாவை நான் கொலை செய்தேனா..? மரணத்திற்கு முன் நடந்தது இதுதான்..!! புதிய புயலை கிளப்பிய சசிகலா..!!

RUPA

Next Post

நல்லகண்ணு மரணம்..!! யாரும் நம்பாதீங்க..!! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பரபரப்பு விளக்கம்..!!

Wed Feb 25 , 2026
தமிழ்நாட்டின் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்த தகவல்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன. 101 வயதை கடந்த இந்த மாபெரும் ஆளுமை, வயது முதிர்வு காரணமாக தற்காலிகமாகச் சந்தித்து வரும் உடல்நல சவால்கள் பெரும் பேசுபொருளாகியுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து, ஆர்.நல்லகண்ணு நுரையீரல் தொற்று மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் […]
Nallakannu 2025

You May Like