பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது..
இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. பாமக என்பது அங்கீகரிக்கப்படாத கட்சி.. அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்த வரை, தேர்தல் ஆணையம் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.. மேலும் கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் தீர்வு வேண்டுமானால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று ராமதாஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது..
அதன்படி பாமக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தடை கோரியும் கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்கக் கோரியும் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த மனு இன்று நீதிபதி தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது, ராமதாஸின் மனு குறித்து அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்..



