நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.. டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் வெப்பம் தகித்து வருகிறது.. பல இடங்களில் வெயில் சதமடித்து வருவதால், பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது..
எனினும் தமிழகத்தில் தொடர்ந்து வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.. பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது..
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.. மேலும் பெற்றோர், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்..
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் ஜூன் 4-ம் தேதி திறக்கபடும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பள்ளி திறப்பு 4-ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கோவை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : இயற்கைக்கு மாறான மக்கள் தொகை மாற்றத்தை ஆராயக் குழு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..



