திமுக கூட்டணிக்கு ஆதரவு..!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரபல கட்சி..!! CM ஸ்டாலின் குஷி..!!

tamilnadu cm mk stalin

தமிழக அரசியல் களம் தேர்தல் திருவிழாவுக்கு தயாராகி வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் ‘தமிழ் மாநில தேசிய லீக்’ கட்சி அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப் வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித அரசியல் சமரசமுமின்றி, தடம் மாறாத கொள்கை உறுதியோடு திமுகவை ஆதரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சமூக நீதித் தத்துவத்தை நிலைநாட்டுவதிலும் திமுக எடுத்து வரும் தொடர் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையிலேயே இந்தக் கூட்டணி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் அல்தாப் தெளிவுபடுத்தியுள்ளார். “நிறம் மாறாத கொள்கை உறவு” என்ற முழக்கத்தோடு, வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி இமாலய வெற்றி பெற தங்கள் கட்சித் தொண்டர்கள் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றுவார்கள் என அவர் உறுதியளித்துள்ளார்.

Read More : கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய சசிகலா..? எந்த கட்சியுடன் தெரியுமா..? அதிர்ச்சியில் இபிஎஸ்..!!

CHELLA

Next Post

Flash : நகைப்பிரியர்கள் கவனத்திற்கு..! தங்கம் விலை சற்று குறைவு..! எவ்வளவு தெரியுமா?

Thu Feb 26 , 2026
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
gold price prediction

You May Like