இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்திற்கு நல்லகண்ணுவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.. இன்று மாலை 4 மணி வரை மக்களின் அஞ்சலிக்காக நல்லகண்ணு உடல் வைக்கப்பட்டிருக்கும்.. பின்னர் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நல்லக்கண்ணு உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்படுகிறது..
இந்த நிலையில் நல்லகண்ணுவின் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நல்லகண்ணு உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.. தவெக தலைவரும், நடிகருமான விஜய்யும் நேற்றிரவு நல்லகண்ணு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அதே போல் இன்று காலை நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.. இந்த நிலையில் சென்னை தி.நகர் சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் தோழர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.. நல்லகண்ணு உடலுக்கு மாலை அணிவித்து நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்..
Read More : திமுக கூட்டணிக்கு ஆதரவு..!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரபல கட்சி..!! CM ஸ்டாலின் குஷி..!!



