என்னது.. பாஜகவில் இருந்து 20 அமைச்சர்களா..? தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி..? பரபரப்பை கிளப்பிய நயினார் நாகேந்திரன்..!

eps nainaar 1

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..


திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.. எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.. நாம் தமிழர் தனியாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.. விஜய்யின் தவெக உடனும் இன்னும் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வராததால் தவெகவும் தனித்து போட்டியிடும் என்றே கூறப்படுகிறது.

அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது முதல் தமிழ்நாட்டில் என்.டி.ஏ ஆட்சி நடைபெறும் என்று பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.. ஆனால் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி தான் நடைபெறும் என்று இபிஎஸ் கூறி வருகிறார்.. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் கடந்த மாதம் 23-ம் தேதி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் பிரம்மாண்டமா நடந்தது.. அதில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்திற்கு இரட்டை என்ஜின் ஆட்சி தேவை என்று பிரதமர் கூறினார்.. மேலும் அன்றைய தினம் அதிமுக என்ற சொல்லையே ஒருமுறை கூட மோடி பயன்படுத்தவில்லை.. எனவே ஒருவேளை இந்த தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக தெரிகிறது..

இதனை உறுதி செய்யும் வகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.. சென்னை அமைந்தகரையில் பாஜக பணிமனை திறப்பு விழாவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.. அப்போது பாஜகவில் இருந்து 20-க்கும் மேற்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வார்கள் என்பதை உறுதியாக சொல்கிறேன் என்று கூறினார்.. மேலும் இங்கிருப்பவர்களிடையே சிலர் அமைச்சர்களாக வருவார்கள் என்பது உறுதி என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.. மேலும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக ஆட்சி வெகு விரைவில் மலரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.. எம்.ஜி.ஆர் வழியில் மக்களுக்காக செயல்படும் கட்சியாக பாஜக இருப்பதாகவும் நயினார் கூறியுள்ளார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவில் இருந்து சிலர் அமைச்சராவார்கள் என்று நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Read More : திமுக கூட்டணிக்கு ஆதரவு..!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரபல கட்சி..!! CM ஸ்டாலின் குஷி..!!

RUPA

Next Post

EPFO-வின் பரபரப்பான முடிவு.. இனி பணம் நேரடியாக வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும்..!

Thu Feb 26 , 2026
லட்சக்கணக்கான EPFO ​​உறுப்பினர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணமாக, 7.11 லட்சம் செயல்படாத EPF கணக்குகளின் சிக்கலைத் தீர்க்க தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது. ரூ.1,000 அல்லது அதற்கும் குறைவான இருப்பு உள்ள கணக்குகள் இப்போது எந்த விண்ணப்பமும் இல்லாமல் சந்தாதாரர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த சிறிய, செயலற்ற கணக்குகளில் நீண்ட காலமாக சுமார் ரூ.30.52 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது என்று தகவல்கள் […]
PF Epfo Money

You May Like