தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பமாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் பாதையை முற்றிலும் மாற்றிக்கொள்ளப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு தனி அணியாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ் மற்றும் அவரது தீவிர ஆதரவாளரான உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர், தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
சமீபகாலமாக ஓபிஎஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் நிலையில், ஓபிஎஸ்-ஸும் அதே பாதையைப் பின்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், “3 முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்த அனுபவம் கொண்ட தான், இப்போதுதான் வளர்ந்து வரும் ஒரு புதிய கட்சியில் இணைவது சரியாக இருக்குமா?” என ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இதனால், அவர் தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்திற்காகத் திமுகவை நோக்கி நகர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எந்தவொரு முக்கிய காரியத்தையும் ஜோதிடக் கணிப்புகளின் படியே செய்யும் பழக்கம் கொண்ட ஓபிஎஸ், திமுகவில் இணைவது குறித்தும் தனது ஆஸ்தான ஜோதிடரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அவரது ஆலோசனையின்படி, இன்று அல்லது பிப்ரவரி 28-ஆம் தேதியான நாளை, அரசியல் மாற்றத்திற்கான மிகச்சிறந்த நாளாக கணிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் மற்றும் ஐயப்பன் ஆகியோர் திமுகவில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read More : காலையிலேயே ஷாக்..!! அதிமுகவுடன் கூட்டணி கிடையாது..!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்கிரமராஜா..!!



