திமுக கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணைந்தது.. ஆனாலும் இந்த சிக்கல் இருக்கு..! ஸ்டாலின் எப்படி சமாளிக்கப் போகிறார்?

dmk office stalin

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.. டி.ஆர். பாலு தலைமையிலான குழுவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தை உள்ளிட்டோர் இறுதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்..


கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் இந்த முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ளன.. கடந்த முறை என்.டி.ஏ கூட்டணியில் இருந்த தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.. அதே போல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் ஏற்கனவே திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ கட்சி திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.. எஸ்டிபிஐ கட்சியுடன் இன்று திமுக தரப்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.. அதே போல் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.. இந்த கட்சியுடனும் இன்று தொகுதி பங்கீடு  பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகி உள்ளது..

மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியர்சு ஆதரவு தெரிவித்துள்ளார்.. அதே போல் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியும் இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் களம் காண்கிறது.. எனவே இந்த முறை கூடுதலாக புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் இருக்கிறது..

ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.. புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதால் பழைய கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது..

கூட்டணி கட்சிகள் அனைத்தையும் அரவணைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் திமுக உள்ளது.. அதன் அடிப்படையிலேயே நட்பு ரீதியாக பழைய கட்சிகளிடம் தொகுதிகளின் இடங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் என்று திமுக தலைமை கோரிக்கை விடுத்துள்ளது.. இந்த கட்சிகளும் திமுகவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Read More : FLASH | இன்னும் சற்று நேரத்தில்..!! கூட்டணியை அறிவிக்கிறார் ராமதாஸ்..!! தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

RUPA

Next Post

11 அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்..! மகிழ்ச்சியில் பூசாரிகள்..!

Sat Feb 28 , 2026
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் “ கிராம கோயில் பூசாரிகள் மாநாட்டில்” கிராம கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.. மேலும் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. அப்போது பூசாரிகலின் நலனுக்காக 11 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராம பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும். பூசாரிகள் மரணமடைந்தால் வழங்கப்படும் வாரிசுதாரர் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். கிராம […]
cm stalin n 3

You May Like