பெண்களுக்கு குட் நியூஸ்..!! ரூ.4,000இல் இருந்து ரூ.8,000ஆக உயர்வு..!! புதிய அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

stalin money

தமிழ்நாடு அரசுப் பணிகளில் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில், ஆதரவற்ற விதவைகளுக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவீத உள் இடஒதுக்கீட்டு முறையில் முக்கிய சீர்திருத்தத்தை அரசு மேற்கொண்டுள்ளது. பொருளாதார மாற்றங்களை கருத்தில் கொண்டு, இந்த சலுகையைப் பெறுவதற்கான தகுதி வரம்பில் நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு அதிரடி மாற்றத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுவரை, ஆதரவற்ற விதவை என்பதற்கான சான்றிதழ் பெற்று வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட பெண்ணின் மாத வருமானம் ரூ.4,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. தற்போது நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் வாழ்வாதார செலவுகளைக் கணக்கில் கொண்டு, இந்த வருமான உச்சவரம்பை 8,000 ரூபாயாக உயர்த்தி அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி முடிவின் மூலம், முன்னதாக வருமான வரம்பு காரணமாகச் சலுகை மறுக்கப்பட்ட பல ஏழைப் பெண்களுக்கு இனி அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்தச் சலுகை யாருக்குப் பொருந்தும் என்பது குறித்தும் அரசு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. சட்டப்பூர்வமாக தனது கணவரை இழந்த பெண்களுக்கு மட்டுமே இந்த 10 சதவீத உள் இடஒதுக்கீடு பொருந்தும். நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்ற பெண்கள், இந்தப் பிரிவின் கீழ் முன்னுரிமை கோர முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வருமான வரம்பு உயர்வு, கணவரை இழந்து வாழ்வாதாரத்திற்காக போராடும் பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

Read More : ஈரான் மீது வான்வழி தாக்குதல்..!! பறந்து வரும் ஏவுகணைகள்..!! குழந்தைகள் உள்பட 200 பேர் மரணம்..!! பெரும் பதற்றம்..!!

CHELLA

Next Post

பெற்றோர்களே ரெடியா..? தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்..!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு..!!

Sun Mar 1 , 2026
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்கவுள்ளது. கோடை விடுமுறைக்கு முன்பாகவே மாணவர் சேர்க்கை பணிகளை துரிதப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான விரிவான முன்னேற்பாடுகள் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தயார் நிலையில் உள்ளன. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள அரசுப் பள்ளிகளிலேயே சேர்ப்பதை உறுதி செய்யும் வகையில் இந்தச் சிறப்புத் திட்டம் […]
school 1

You May Like