வங்கிக் கணக்கில் ரூ.2,000..!! இதை செய்தால் உங்களுக்கும் பணம் வரும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Agri Money 2026

மத்திய அரசின் ‘பிஎம் கிசான்’ (PM-KISAN) நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு, அடுத்தகட்ட தவணைத் தொகையைப் பெறுவதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ரூ. 6,000 நிதியுதவி, 3 தவணைகளாக தலா ரூ. 2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த நிதியுதவியை தடையின்றிப் பெறுவதற்கு, ஒவ்வொரு விவசாயியும் கட்டாயமாக விவசாய அடையாள எண் பெற்றிருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.


புதிதாக விண்ணப்பிக்கும் அல்லது விடுபட்ட விவசாயிகள், தங்களின் நில ஆவணங்கள் (பட்டா, சிட்டா), ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றுடன் தாலுகா அளவிலான வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம். அங்கு உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, சரிபார்ப்புப் பணிகள் முடிந்த பின்னரே விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும். இந்த அடையாள எண் முறை அமல்படுத்தப்படுவதன் மூலம், தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே நிதி சென்றடைவதை அரசு உறுதி செய்கிறது.

அடையாள எண் மற்றும் இ-கேஒய்சி (e-KYC) நடைமுறைகளை சரியாக முடித்துள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மட்டுமே, அடுத்த தவணைத் தொகையான ரூ. 2,000 வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள், உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தங்களின் நிதியுதவியை தவறவிடாமல் பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் சந்தேகங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Read More : தோசை தினம்..!! தினமும் காலை டிபனாக இதை சாப்பிடலாமா..? மருத்துவர்கள் சொல்வது என்ன..?

CHELLA

Next Post

டேய் சீக்கிரம் வாடா..!! ஆசையோடு காதலி வீட்டுக்கு போன காதலன்..!! பாலில் மயக்க மருந்து..!! தனியாக வந்த அந்தரங்க உறுப்பு..!! பயங்கரம்..!!

Mon Mar 2 , 2026
டெல்லியில் காதலிப்பதாக கூறி திருமணத்தை மறைத்த மருத்துவருக்கு, அவரது காதலியே விபரீத தண்டனை அளித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லியை சேர்ந்த அமீனா என்ற இளம்பெண், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விசர்ஜீத் என்ற மருத்துவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், விசர்ஜீத் தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட ரகசியத்தை மறைத்து, அமீனாவுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்தத் துரோகத்தை அமீனா கண்டறிந்தபோது, ஏமாற்றப்பட்ட ஆத்திரத்தில் தனது காதலனைப் […]
Sex 2025 1

You May Like