முதல்வர் விஜய் செய்தது உரிமை மீறல்.. பேரவைத் தலைவர் செய்தது நியாயமா..? Ex. சபாநாயகர் அப்பாவு கேள்வி..!

appavu vijay

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் நேற்று பதிலுரையாற்றினார்.. அப்போது முதல்வர் விஜய் தனது அரசியல் பயணம் குறித்து விரிவாக பேசி தன்னை தேர்ந்தெடுத்து சட்டப்பேரவைக்கு அனுப்பிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.. அப்போது டாஸ்மாக்கில் கட்சி நிதி என்று முதல்வர் விஜய் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். முதல்வர் விஜய் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த போதே, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்..


அதன்பின்னர் தனது உரையை தொடர்ந்த முதல்வர் விஜய் குட்டிக் கதை சொல்கிறேன் என்று சொன்னார்.. “ வெயிலில் நின்றபடி எதையோ தேடி கொண்டிருந்த ஒரு வயதான நபரிடம் ஒரு சிறுவன் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்க “ உங்க அப்பா இங்க தான் இருப்பாருன்னு சொன்னாங்க.. அதான் தேடிகிட்டு இருக்கேன்.. எங்க உங்க அப்பாவையே காணோம்..” என்று சொன்னாராம்.. எங்களுக்கும் இதே போல் நக்கல், நையாண்டியாக, சம்மந்தம் சம்மந்தம் இல்லாத குட்டிக்கதை எல்லாம் பேச தெரியும்..” என்று கூறினார்..

முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் தோல்வியை மறைமுகமாக குறிப்பிட்டே, முதல்வர் விஜய் நக்கலாக விமர்சித்திருந்தார்.. மேலும் விஜய்யின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உங்க மனைவி பிள்ளைகள் எங்கே என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்..

நேற்று எதிர்க்கட்சி தலைவர் பேசும் நமது அரசை evils என்று சொன்னார்.. ஆனால் Evils, Evils என்று Devils பேசக் கூடாது.. (அதாவது தீயவர்கள் தீமையை பற்றி பேசக்கூடாது..) எதிர்க்கட்சியினர் இருந்திருந்தால் ஒரு ஆக்‌ஷன் பண்ண வேண்டும் என்று எனக்கு தோன்றியது.. எல்லோரும் போய்விட்டார்கள் பண்ணலாமா என்று சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.. சபாநாயகர் அனுமதி அளித்த உடன் விஜய் Finished என்பதை குறிக்கும் வகையில் சைகையை செய்தார். இந்த வீடியோ நேற்று முதலே வைரலானது.

எனினும் பேரவையில் இல்லாத ஒருவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விமர்சிக்கக் கூடாது என்றும், விஜய் மீது சபாநாயகர் உரிமை மீறல் நடவடிக்கை எடுப்பாரா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்..

இந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழ்நாடு சட்டப்பேரவை விதிப்படியும் மரபு படியும் பேரவையில் இல்லாத ஒருவரை பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சட்டமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ அல்லது உடல் மொழியாகவோ விமர்சனமோ அல்லது கிண்டலோ, கேலியோ செய்யக்கூடாது என்பது சட்டப் பேரவை தலைவருக்கு தெரிந்திருக்கும்.

இது தொடர்பாக 22.6.2026 அன்று சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உடல் மொழியாக அல்லது வாய்மோழியாக யாரையும் கிண்டலும், கேலியும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்த அடுத்த நாளே, (23.6.2026) இதே போல் வாய்மொழியாகவும், உடல் மொழியாகவும் அவையில் இல்லாத (முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்) குறித்து தமிழக முதலமைச்சர் கிண்டலும், கேலியும் செய்தது அவை உரிமை மீறல் இல்லையா ?

அவ்வாறான செயலில் ஈடுபட்ட முதல்வர் மீது தாமாக முன்வந்து அவை உரிமை மீறல் நடவடிக்கையை பேரவைத் தலைவர் எடுப்பாரா? தானே முதலமைச்சருக்கு இதுபோல் செயல்பட அனுமதித்து நியாயமா? பதிலை எதிர்பார்த்து தமிழ்நாடே காத்திருக்கிறது பேரவை தலைவர் அவர்களே!” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : ஆளுங்கட்சியை எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவீங்களா..? திமுக இதை வேடிக்கை பார்க்காது..!உதயநிதி எச்சரிக்கை..!

RUPA

Next Post

“நயினார் நாகேந்திரன் காமெடி பீஸ். அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது..” அமைச்சர் செங்கோட்டையன் அட்டாக்..!

Wed Jun 24 , 2026
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ நடிப்பின் உச்சத்தில் இருந்துவிட்டு, அரசியலுக்கு வந்த முதல்வருக்கு பேரவையில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.. பேரவைக்கு வெளியே சென்று எதிர்க்கட்சியினர் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.. திமுகவினர் வெளியே சென்று கருத்து கூறியதற்கு பதிலாக உள்ளேயே கூறியிருந்தால் முதல்வர் பதில் சொல்லி இருப்பார். திமுகவினரின் குற்றச்சாட்டுகளை தமிழக மக்கள் புறக்கணித்து விட்டனர்.. திமுகவை மக்கள் ஏற்காததால் தான் […]
sengottaiyan nainaar

You May Like