fbpx

நாடு முழுவதும் 82 வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேயில் இயக்கப்படுகின்றன..‌.! மத்திய அமைச்சர் தகவல்…!

2024, ஜனவரி 31 நிலவரப்படி, 82 வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேயில் இயக்கப்படுகின்றன. இவை அகல ரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட கட்டமைப்புக் கொண்ட மாநிலங்களை இணைக்கின்றன. இது தவிர, ரயில் சேவைகளை நிறுத்துவது, வந்தே பாரத் உள்ளிட்ட புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது ஆகியவை இந்திய ரயில்வேயில் நடந்து வரும் செயல்பாடுகளாகும்.

தற்போது புதுதில்லி-மும்பை (வதோதரா-அகமதாபாத் உட்பட) மற்றும் புது தில்லி-ஹவுரா (கான்பூர்-லக்னோ உட்பட) வழித்தடங்களில் ரயிலின் வேகத்தை மணிக்கு 160 கிலோ மீட்டருக்கு அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், தானியங்கிக் கதவுகள், சாய்வு இருக்கைகள், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் சுழலும் இருக்கைகள், ஒவ்வொரு இருக்கைக்கும் மொபைல் சார்ஜிங் சாக்கெட்டுகள் போன்ற பயணிகள் வசதிகளுடன் உள்ளது.

தற்போது இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் இயங்கும் வந்தே பாரத் ரயில்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு கவச் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது என மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Vignesh

Next Post

உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்கும் மோர் கற்றாழை.! எப்படி செய்யலாம்.!?

Thu Feb 8 , 2024
பொதுவாக தெருக்களில் சாதாரணமாக வளர்ந்து நிற்கும் கற்றாழையில் உடலுக்கு நன்மைகளை தரும் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் இருந்து வருகின்றன. ஆனால் இதை எப்படி பயன்படுத்துவது என்பது பலருக்கும் தெரிவதில்லை. மேலும் சோற்றுக் கற்றாழையில் மோர் கலந்து குடித்து வந்தால் உடலில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.? சோற்றுக் கற்றாழையில் மோர் கலந்து ஜூஸாக குடித்து வந்தால் உடல் எடை குறையும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் […]

You May Like