“மோசடி ஆட்சிகளிலேயே முக்கியமான ஆட்சி இந்த திமுக ஆட்சி.. தீய சக்தி ஆட்சி மறையட்டும்..” விஜய் ஆவேசம்..!

tvk vijay tanjore

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது “ கரூரில் தொடங்கி ஜனநாயகன் ரிலீஸ் வரைக்கும் நிறைய பிரச்சனைகள் கொடுத்து வருகின்றனர்.. ஆனால் ஜனநாயகன் பிரச்சனையில் முதல்வர் உட்பட பலர் குரல் கொடுத்தனர்.. முதல்வர் பட்டும் படாமல் குரல் கொடுத்தார்.. அவர்களுக்கு என் நன்றி..


ஏற்கனவே கட்சி காரர்கள் தொல்லையால் தூங்கமுடியவில்லை, இப்போது இந்த விஜய்யும் மக்கள் சக்தியோடு வந்துவிட்டான், மக்களையும் கேள்வி கேட்க வைக்கிறான்.. ரூ.5000 கொடுத்தால் அதையும் கேள்வி கேட்க வைக்கிறான்.. கூட்டணி கட்சிகள் தொல்லை தாங்க முடியவில்லை.. விஜய் பிரச்சாரத்தை முடக்கப் பார்த்தாலும் மக்கள் விஜய் பின்னாடி தான் நிற்கின்றனர் என்று என்ன செய்யலாம் சி.எம். சார் குழப்பத்தில் இருப்பார்.. ஆனால் சி.எம். சார் உங்களால் இந்த விஜய்யை முடக்கலாம்.. வீட்டில் இருக்கும் ஒவ்வொரு விஜய்யையும், விஜியையும் முடக்க முடியாது..

ஏனெனில் அவர்கள் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. குடும்பம் குடும்பமாக பிரச்சாரத்திற்கு இறங்குவார்கள்.. உங்களால் மட்டும் இல்லை.. யாராலும் அதை தடுக்க முடியாது..

மக்கள் வாழ்வாதார பிரச்சனைக்கு ஏதாவது கேட்டால் நிதிச்சுமை என்று சொல்கிறீர்கள், ஆனால் உங்க அப்பாவுக்கு சிலை வைக்க மட்டும் எங்கிருந்து காசு வருகிறது.. முதலில் மக்களின் வாழ்வாதார பிரச்சனையை பாருங்கள்.. பின்னர் சிலை வைப்பதை பார்த்துக்கொள்ளலாம்..

கேஸ் சிலிண்டருக்கு மானியம் தருவது என்ன ஆனது? கரும்புக்கான ஆதார விலையாக ரூ.4000 தருவதாக சொன்னது என்ன ஆனது..? இதை எல்லாவற்றையும் நீட் தேர்வை ஒழிப்போம் என்று சொன்னீர்களே அது என்ன ஆனது.. கேட்டால் முன்மாதிரி ஆட்சி என்று சொல்வீர்கள்.. இது மோசடி ஆட்சி. மோசடி ஆட்சிகளிலேயே முக்கியமான ஆட்சி இந்த திமுக ஆட்சி.. மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா? மக்களை ஏமாற்றும் ஸ்டாலின் சார் வேண்டுமா? இந்த விஜய்யை நம்புறீங்களா? இல்லை ஸ்டாலின் சாரை நம்புறீங்களா? இந்த விசில் சத்தத்திற்கு ஸ்டாலின் தொடரட்டும் என்று அர்த்தம் இல்லை.. தீய சக்தி திமுக ஆட்சி மறையட்டும் என்று அர்த்தம்..” என்று தெரிவித்தார்..

Read More : “திமுக மீண்டும் வந்ததாக சரித்தரமே கிடையாது.. கருணாநிதியாலயே அது முடியல..” விஜய் திட்டவட்டம்..!

RUPA

Next Post

தவெக ஆட்சிக்கு வந்தால் பயிர் கடன் ரத்து.. விஜய் அளித்த வாக்குறுதிகள் என்னென்ன..?

Wed Mar 4 , 2026
தஞ்சையில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் திமுக அரசை கடுமையாக சாடினார்.. திமுக தீயசக்தி என்றும், தவெக தூய சக்தி என்று, அடுத்தது தவெக ஆட்சி தான் அமையும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.. மேலும் தவெக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் விஜய் பேசினார்.. அப்போது “ நமது தவெக ஆட்சி அமைந்ததும் உரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம். 5 ஏக்கர் […]
tvk vijay 3

You May Like