“ஈரானின் புதிய உச்ச தலைவர் யாராக இருந்தாலும் கொல்லப்படுவார்..” இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை..!

israel katz

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் இன்று புதிய உச்ச தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கையை தொடங்கியது. இதையடுத்து, இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“யாரை உச்ச தலைவராக நியமித்தாலும், அவர் அழிக்கப்பட வேண்டிய இலக்காகவே இருப்பார்” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


மேலும் “இஸ்ரேலை அழிக்கும் திட்டத்தைத் தொடர்ந்து நடத்தவும், அமெரிக்காவையும் சுதந்திர உலகத்தையும் அச்சுறுத்தவும், பிராந்திய நாடுகளுக்கு ஆபத்தாக இருக்கவும், ஈரான் மக்களை அடக்குமுறையில் வைக்கவும் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும் அழிப்பதற்கான இலக்காக இருப்பார்” என்று அவர் தெரித்துள்ளார்..

புதிய உச்ச தலைவரை தேர்வு செய்யும் நிலையில் ஈரானின் நிபுணர் சபை உடன் தொடர்புடைய ஒரு கட்டிடத்தை இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை தாக்கியது.
கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதலில், 86 வயதான ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்தார். இதுவே இந்த போர் தொடங்க காரணமாக அமைந்தது.

“எங்கள் அமெரிக்க கூட்டாளிகளுடன் இணைந்து, அந்த ஆட்சியின் திறன்களை முழுமையாக சிதைக்கவும், ஈரான் மக்கள் அந்த ஆட்சியை அகற்றி மாற்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்கவும் நாங்கள் முழு வலிமையுடன் செயல்படுவோம்” என்றும் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.

காமெனியின் மகன் மொஜ்தபா புதிய உச்ச தலைவராக தேர்வு?

காமெனியின் மொஜ்தபா காமெனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் மொஜ்தபா காமெனெயை புதிய உச்ச தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என்று இஸ்ரேல் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. ஆனால் இதை ஈரான் அரசு ஊடகங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மொஜ்தபா காமெனி, தனது தந்தையின் அலுவலக நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்தவர் என்றும், இஸ்லாமிய புரட்சிகர படை உள்ளிட்ட படைகளின் உயர் மட்ட தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் ஊடகங்கள், அவர் தந்தையை விடவும் கடுமையான நிலைப்பாடு கொண்டவர் என்றும், ஈரானில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கடுமையான அடக்குமுறைகளுக்குப் பின்னணியில் இருந்தவர் என்றும் கூறுகின்றன.

2019-ம் ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்க கருவூலத் துறை மொஜ்தபா மீது தடைகள் விதித்தது. அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமலும், அரசுப் பதவியில் நியமிக்கப்படாமலும், உச்ச தலைவர் சார்பில் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா இலக்குகள் மீது தாக்குதல்

இதனிடையே, இஸ்ரேல் ராணுவம் லெபனானின் பெய்ருட் நகரில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு தொடர்புடைய இலக்குகள் மீது புதிய தாக்குதல் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதற்கு முன், பெய்ரூட்டில் உள்ள இரண்டு கட்டிடங்களை காலியிடுமாறு எச்சரிக்கை விடுத்த பிறகே வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஈரான் – இஸ்ரேல் போர் : இந்தியர்களுக்காக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! கட்டுப்பாட்டு அறை அமைப்பு..!

RUPA

Next Post

ஈரானில் 1 லிட்டர் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா..? ஷாக் ஆகாம படிங்க..!

Wed Mar 4 , 2026
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது நடத்தும் கூட்டுத் தாக்குதல்கள் உலகை மட்டுமல்ல, சாதாரண இந்தியர்களின் பட்ஜெட்டையும் உலுக்குவதாகத் தெரிகிறது. இந்தப் போர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை விண்ணில் செலுத்தும் என்பது உறுதி என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ தாண்டியிருக்கும் நேரத்தில், ஈரானில் விலைகளைக் கேட்டால் யாரும் அதிர்ச்சியடைவார்கள். அங்கு ஒரு லிட்டர் […]
Petrol Pump 1 1

You May Like