“மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.. முதல்வர் வெட்டிப்பெருமை பேசிட்டு இருக்காரு..” இபிஎஸ் சாடல்..!

eps stalin new

மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின் வெட்டிப்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சாடி உள்ளார்..


தனது எக்ஸ் பக்கத்தில் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்துள்ளது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதேபோன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன?

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், ஒரு கையாலாகாத வெறும் பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பது தானே? திமுக அரசின் “குற்றவாளிகள் கைது” நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை!

பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து தைரியமாக இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்றால், இங்கே நடக்கும் சமூக அநீதி திமுக அரசு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று தானே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?

இப்படி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? “முடிந்துவிட்டது” என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். ஆமாம் திரு. ஸ்டாலின் அவர்களே, உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது! பெண்கள் பாதுகாப்பு முடிந்துவிட்டது! சமூகநீதி முடிந்துவிட்டது! மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது!

இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதே! அதை மிக விரைவில் தமிழக மக்கள் “சிறப்பாக செய்ய” காத்திருக்கிறார்கள்!

இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்..

Read More : “நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள்.. எதிரிகள் நடுங்குவது இயல்புதானே..” திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..!

RUPA

Next Post

தீவிரமடையும் போர்.. 23,000 இந்திய மாலுமிகள் சிக்கி தவிப்பு.. வளைகுடா பகுதியில் பெரும் பதற்றம்..!

Thu Mar 5 , 2026
23,000 இந்திய மாலுமிகள் மத்திய கிழக்கு வளைகுடா பகுதியில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான போர் தீவிரமடைந்ததால் கடல் போக்குவரத்து பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வளைகுடாவில் சிக்கிய 36 இந்திய கப்பல்கள் மார்ச் 5 நிலவரப்படி, இந்தியக் கொடியுடன் இயங்கும் 36 கப்பல்கள் Persian Gulf பகுதியில் சிக்கி உள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானில் நடத்திய ராணுவ […]
strait of hormuz iran

You May Like