பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் – ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் உறவு தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பை கிளப்பி வருகின்றன. ரங்கராஜ் தனது முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல், தன்னுடன் 2 ஆண்டுகள் உறவில் இருந்ததாகவும், தான் இப்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னை மாதம்பட்டி தவிர்ப்பதாகவும், ஜாய் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் மாதம்பட்டி ரங்கராஜு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்த அவர் தொடர்ந்து அவருடன் இருந்த வீடியோக்கள் போட்டோக்களையும் பதிவிட்டு விமர்சித்து வருகிறார். இந்த சூழலில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களை நீக்கக் கோரியும் மாதம் ரங்கராஜ் சென்ன உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா இடையே மத்தியஸ்தம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பி.எம். பிரகாஷை நியமித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என நிரூபிக்க ஜாய் கிரிசில்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. அப்போது மரபணு சோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலும் கூறப்பட்டது.. இதையடுத்து இதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
ஜாய் கிரிசல்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் மரபணு சோதனை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆணையர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவுகள் சீல் வைத்த கவரில் மத்தியஸ்தர் நீதிபதி பி.என்.பிரகாஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பது டி என் ஏ பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையில் மத்தியஸ்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டதற்கு எதிராக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கு ஜூன் 8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read more: டாஸ்மாக் – நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1000 கோடி ஊழல்.. பிரச்சாரத்தில் கொதித்து பேசிய விஜய்..!



