மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழ்நிலையால் எரிவாயு, கச்சா எண்ணெய் எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற கூறப்படுகிறது.. இந்த சூழலில், இந்தியாவுக்கு மாற்று எரிசக்தி ஆதாரங்களை வழங்க ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகள் எரிவாயு விற்க முன்வந்துள்ளதாக அரசுத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
இந்தியாவுக்கு தற்போது தினமும் சுமார் 195 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் (mmscmd) அளவில் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் கத்தார் மட்டும் தினமும் 60 mmscmd அளவு எரிவாயு வழங்குகிறது. மேற்கு ஆசியப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதால், இந்திய அரசு தற்போது எரிவாயு வாங்க மாற்று சந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
மேலும், இந்தியா தற்போது முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (Liquefied Petroleum Gas) வாங்குவதற்கான முயற்சியில் உள்ளது. இதற்காக இந்திய அரசு, சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC)ஆகிய அமைப்புகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மேலும், கப்பல்களுக்கு காப்பீடு பெறுவதற்காக இந்தியா அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம்
எரிசக்தி ஆதாரங்களை பல்வேறு நாடுகளிலிருந்து பெறும் நோக்கில், இந்தியா சமீபத்தில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களையும் கையெழுத்திட்டுள்ளது.
அரசுத் தகவல் வட்டாரங்கள் கூறுவதாவது, இந்தியா தினமும் இரண்டு முறை எரிசக்தி நிலைமையை மதிப்பாய்வு செய்து வருகிறது. தற்போது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு நிலைமை மிகவும் வசதியான நிலையில் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவின் கையிருப்பு நிலையும் போதுமான அளவில் உள்ளது. தினமும் புதிய கையிருப்புகள் சேர்க்கப்பட்டு வருவதால் எந்தவித சிக்கலும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
உலகளவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை
உலகளவில் எல்.பி.ஜி, எல்.என்.ஜி மற்றும் கச்சா எண்ணெய் பற்றாக்குறை தற்போது இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இந்தியா மற்ற எரிசக்தி வழங்குநர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.
மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிடம் மொத்தமாக 8 வாரங்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய தயாரிப்புகள் கையிருப்பில் உள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. இதில் இந்தியாவின் மூலதன எண்ணெய் கையிருப்புகளும் அடங்கும்.
மேலும், இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் சுமார் 40 சதவீதம் மட்டுமே ஹார்முஸ் வழியாக வருகிறது. மீதமுள்ள 60 சதவீதம் மற்ற வழிகளிலிருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் இந்தியாவுக்கு பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.
நிலைமையை தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா
மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழ்நிலையை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இருப்பினும், போதுமான கையிருப்பும் பல்வேறு நாடுகளிலிருந்து எரிசக்தி வாங்கும் ஏற்பாடுகளும் இருப்பதால், விநியோகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களை இந்தியா சமாளிக்க தயாராக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது இந்தியாவிடம் சுமார் 25 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. இதற்கு கூடுதலாக 25 நாட்களுக்கு போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பும் உள்ளது.
இதனால், மொத்தமாக இந்தியாவிடம் சுமார் 8 வாரங்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய தயாரிப்புகள் கையிருப்பில் உள்ளன. குறுகிய காலத்தில் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டாலும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு உறுதியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்தியா முன்பு செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது. எல்.பி.ஜி, எல்.என்.ஜி விநியோகத்திலும் இந்தியா தற்போது சீரான மற்றும் பாதுகாப்பான நிலையில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகளாவிய எரிசக்தி சந்தையின் நிலையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்தியாவுக்கு தேவையான எரிபொருள் விநியோகம் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
Read More : அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பாவிற்கு மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது.. ஈரான் அறிவிப்பு..!


