அது என்ன Blue Sparrow.? கமேனியைக் கொல்ல இஸ்ரேல் பயன்படுத்திய ஏவுகணை.. விண்வெளியில் இருந்து ஏவப்பட்டதாம்..!

netanyahu khamenei

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணம் மேலிருந்து வந்தது… ஆம் உண்மை தான்.. விண்வெளியில் இருந்து நடத்தப்பட்ட ஒரு வான்வழி தாக்குதலால் அவர் மரணம் அடைந்துள்ளார்.. 86 வயதான இந்த மதத் தலைவரை கொன்ற தாக்குதல் “ Blue Sparrow” என்ற சக்திவாய்ந்த ஏவுகணை மூலம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை முதலில் விண்வெளியின் எல்லை வரை உயர்ந்து பின்னர் மிக அதிக வேகத்தில் பூமியை நோக்கி கீழிறங்கி இலக்கை தாக்கும் திறன் கொண்டதாகும்.


கடந்த சனிக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும் அது தங்களுக்காக அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இஸ்ரேல் கூறி வந்தது.. அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவும் – ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், திடீரென இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின.. இது தான் தற்போது மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ள போரின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் நடத்திய ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கையின் போது தேஹ்ரான் நகரில் உள்ள பாஸ்டர் தெருவில் இருந்த கமேனியின் பாதுகாப்பு வளாகம் குறிவைத்து ஏவுகணை ஏவப்பட்டது. அப்போது அங்கு பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்குப் பிறகு அடுத்த நாள் காலை, ஈரானின் அரசு ஊடகங்கள் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததை உறுதிப்படுத்தின.

Blue Sparrow ஏவுகணையின் தன்மை

“Blue Sparrow” ஏவுகணை அரை-பாலிஸ்டிக் பாதை எனப்படும் வழியில் பயணம் செய்கிறது. அதாவது இது முதலில் பூமியின் வளிமண்டலத்தை கடந்து உயரத்திற்கு சென்று பின்னர் மிகவும் செங்குத்தாக கீழிறங்கி இலக்கை தாக்கும்.

இந்த ஏவுகணை முதலில் இஸ்ரேல் உருவாக்கிய Sparrow missile family என்ற ஏவுகணை திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் Black Sparrow மற்றும் Silver Sparrow போன்ற ஏவுகணைகளும் உள்ளன. ஆரம்பத்தில் இது சோவியத் காலத்தின் Scud ஏவுகணைகளை மாதிரியாகக் கொண்டு பாதுகாப்பு சோதனைகளுக்காக உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த ஏவுகணை நேரடி தாக்குதல் நடவடிக்கைகளுக்காக மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த ஏவுகணை சுமார் 6.5 மீட்டர் நீளம் கொண்டது. இதன் எடை சுமார் 1.9 டன். இது சுமார் 1,240 மைல் (அல்லது 2,000 கிலோமீட்டர்) தூரம் வரை செல்லக்கூடியது. பொதுவாக இது McDonnell Douglas F-15 Eagle போன்ற போர் விமானங்களிலிருந்து ஏவப்படுகிறது.

ஏவுகணை ஏவப்பட்ட பிறகு, முதலில் ஒரு பூஸ்டர் ராக்கெட், அதை விண்வெளி எல்லை நோக்கி தள்ளுகிறது. அதன் பிறகு அது பிரிந்து மீண்டும் வளிமண்டலத்துக்குள் மிக வேகமாக நுழைந்து இலக்கை தாக்குகிறது.

இந்த வகையான செங்குத்தான தாக்குதல் பாதை காரணமாக வான்வழி பாதுகாப்பு அமைப்புகளுக்கு பதிலளிக்க மிகவும் குறைந்த நேரம் மட்டுமே கிடைக்கும். அதனால் இந்த ஏவுகணையை தடுக்குவது மிகவும் கடினமாகும்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, ஏவுகணையின் சில துண்டுகள் ஈராக் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். அது ஏவுகணை தேஹ்ரான் நோக்கி சென்ற பாதையில் விழுந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆபரேஷன் எபிக் ஃபியூரி

இந்த தாக்குதல் “ஆபரேஷன் எபிக் ஃபியூரி என்ற பெரிய ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் அரசியல் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரான் நேரப்படி காலை 7.30 மணியளவில் புறப்பட்டன. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அவை தாக்குதல் நடத்தும் இடத்தை அடைந்தன.

காலை 9.40 மணியளவில், கமெனி யின் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை நோக்கி சுமார் 30 துல்லிய வழிகாட்டும் ஆயுதங்கள் ஏவப்பட்டன. அவற்றில் பல Blue Sparrow ஏவுகணைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில் தேஹ்ரான் நகரின் பல இடங்களில் இருந்து அடர்ந்த புகை எழுவது காணப்பட்டது. அதில் உச்சத் தலைவரின் இல்லமும் அடங்கும். பின்னர் வெளியான செயற்கைக்கோள் படங்கள் அந்த வளாகத்தில் உள்ள பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதை காட்டின.

பல ஆண்டுகளாக நடந்த உளவுத்துறை திட்டம்

இந்த தாக்குதல் பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட உளவுத்துறை நடவடிக்கையின் முடிவாக நடந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாட் அமைப்பும், அதன் சைபர் உளவுத்துறை பிரிவு Unit 8200-மும் இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரிகள் பல ஆண்டுகளாக கமேனியின் பாதுகாப்பு குழுவின் நகர்வுகளை கண்காணித்து, அவரது இல்லத்தைச் சுற்றியுள்ள செயல்பாடுகளை வரைபடமாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்காக தேஹ்ரான் நகரில் உள்ள போக்குவரத்து கேமராக்களை ஹேக் செய்வது, தொடர்பு வலையமைப்புகளை கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் ஈரான் தலைவர்களின் தினசரி செயல்பாடுகள் பற்றிய “pattern of life” எனப்படும் மிக விரிவான தகவல் வரைபடம் உருவாக்கப்பட்டதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தாக்குதல் நேரத்தை தேர்வு செய்த விதம்

அயத்துல்லா அலி கமேனி, பெரும்பாலும் இரவு நேரங்களில் தனது இல்லத்தின் கீழ் அமைந்துள்ள ஆழமான நிலத்தடி பாதுகாப்பு பங்கரில் தங்கியிருப்பார். இது வான்வழி தாக்குதல்களிலிருந்து அவரை பாதுகாக்கும் என்று ஈரான் அதிகாரிகள் நம்பியிருந்தனர். அதனால் இஸ்ரேல் திட்டமிட்டவர்கள் அவர் அரிதாக மேல்மட்டத்தில் இருக்கும் நேரத்தை காத்திருந்ததாக கூறப்படுகிறது.

சனிக்கிழமை காலை கமேனி மற்றும் அவரது உயர் ராணுவ அதிகாரிகள் நேரடி கூட்டத்திற்காக மேல்மட்டத்தில் கூடும் என்று உளவுத்துறை தகவல் கிடைத்ததும் தாக்குதல் முடிவு செய்யப்பட்டது.

தாக்குதல் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, இஸ்ரேலின் சைபர் பிரிவுகள் அந்த வளாகத்தைச் சுற்றியுள்ள மொபைல் தொலைபேசி வலையமைப்பை செயலிழக்கச் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செல்லாமல் தடுக்கப்பட்டது. ஏவுகணைகள் தாக்கிய போது, ஈரான் அதிகாரிகள் காலை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதலில் கமேனி உடன், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அமைப்பின் பல உயர்மட்ட அதிகாரிகளும் மற்றும் பிற ராணுவ தலைவர்களும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கூட்டத்தில் இருந்த உச்சத் தலைவரின் குடும்ப உறுப்பினர்களில் சிலரும் இந்த தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது

RUPA

Next Post

உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கும் அரசின் அசத்தல் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Fri Mar 6 , 2026
எல்லோரும் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், நல்ல வருமானத்தைப் பெறவும் விரும்புகிறார்கள். உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குவதாக அடிக்கடி விளம்பரப்படுத்தும் போலித் திட்டங்களில் எச்சரிக்கையாக இருங்கள். மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட திட்டங்கள் உங்கள் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க சிறந்த வழியாகும். கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் வங்கிகளை விட சிறந்த நன்மைகளை வழங்குகிறது. இந்தத் திட்டம் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்… கிசான் […]
money

You May Like