Breaking : வீட்டில் வசிக்க அனுமதி கேட்டால் விஜய் மிரட்டுகிறார்.. சங்கீதா பரபரப்பு புகார்..! நீதிமன்றத்தில் புதிய மனு..!

vijay sangeetha n

விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார்.. மேலும் தனது மனுவில் “ விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார்.. அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்..


அது எனது பிள்ளைகளுக்கும், குடும்பத்திற்கும் அவமானத்தை கொடுத்தது.. நன்மதிப்பு கருதி அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை.. எனது கணவரின் மூலம் நெருக்கடி வந்தால் அந்த நடிகையின் பெயரையும் சொல்வேன்.. அவரை 2-வது எதிர் மனு தாரராக சேர்ப்பேன்..” என்று குறிப்பிட்டிருந்தார்..

விஜய்யும் த்ரிஷாவும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங்கில் இருப்பதாக அரசல் புரசலாக தகவல் வந்த வண்ணம் இருந்தது.. இந்த சூழலில் சங்கீதாவின் இந்த குற்றச்சாட்டு மூலம் அந்த நடிகை த்ரிஷா என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது..

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், விஜய்யும், த்ரிஷாவும் ஒரே நிற ஆடையில் ஒன்றாக, கல்பாத்தி அகோரம் மகன் திருமணத்திற்கு நேற்று முன் தினம் வந்தார்.. மேடைக்கு ஒன்றாக சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு ஒன்றாகவே புறப்பட்டனர்.. இந்த சம்பவம் தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆக மாறி உள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.. அதில், நீலாங்கரையில் வீட்டில் வசிப்பதற்கு அனுமதி கோரினால் வழக்கறிஞர் மூலம் விஜய் தரப்பு மிரட்டுவதாக சங்கீதா குற்றம்சாட்டி உள்ளார்.. மேலும் பலமுறை முயற்சித்தும் பரஸ்பரம் பிரிந்து செல்ல விஜய் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்..

மேலும் “ விஜய் வசிக்கும் நீலாங்கரை வீட்டில் எனக்கும் சரிபாதி உரிமை உள்ளது.. விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும்.. படத்தில் நடித்து கோடி, கோடியாய் சம்பாதிக்கும் விஜய் தனக்கும் பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும். நீலாங்கரை வீட்டில் வசிக்க இடைக்கால உத்தரவிட வேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

உங்கள் தண்ணீர் பாட்டில் துர்நாற்றம் வீசுகிறதா? கவனமா இருங்க.. இதை புறக்கணித்தால், ஆபத்தான நோய்கள் ஏற்படலாம்..!

Sat Mar 7 , 2026
இன்றைய வேகமான வாழ்க்கையில், தண்ணீர் பாட்டில் என்பது தாகத்தைத் தணிக்கும் ஒரு மருந்து மட்டுமல்ல, அது நம் அன்றாட வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. காலையில் வீட்டை விட்டு வெளியேறும்போது பலர் நிச்சயமாக தங்கள் பையில் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வார்கள். அலுவலகங்கள், பள்ளிகள், பயணங்கள்… நாள் முழுவதும் ஒரே பாட்டிலில் இருந்து பல முறை தண்ணீர் குடிக்கிறார்கள். இருப்பினும், நாம் குடிக்கும் தண்ணீரின் தூய்மையில் நாம் […]
water bottle smell

You May Like