“எங்கும் கொலை, எப்போதும் கொலை.. நீங்கள் ஆண்டது போதும்.. மக்கள் மாண்டது போதும்..” இபிஎஸ் காட்டம்..!

Stalin EPS 2025

திமுக அரசு இருக்கும் கொஞ்ச நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்றைய தினம் பவானி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில், கடந்த 48 மணி நேரங்களில் நடைபெற்ற பல்வேறு சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தான செய்திகளைப் பட்டியலிட்டு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதை சுட்டிக்காட்டினேன்.


இன்றைய தினம் (தற்போது வரை) செய்திகளில் வந்துள்ள “கொலை நிலவரத்தை” சுட்டிக்காட்ட விழைகிறேன். -கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, முதியவர் கொலை செய்யப்பட்டு, மூதாட்டி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை -சென்னை திரிசூலத்தில் குடிசையில் தங்கியிருந்த இருவர் படுகொலை -தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி படுகொலை இப்படி தொடர்ச்சியாக வரும் கொலை செய்திகள், பாலியல் குற்றச் செய்திகள் மக்களிடையே அச்ச உணர்வை அதிகரித்துள்ளது.

முதியோருக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு கொடூரமான நிலை? இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய பொம்மை முதல்வர், கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறையாவது சட்டம் ஒழுங்கைப் பற்றி வாய் திறந்து பேசியுள்ளாரா? தென்காசி விவசாயி கொலையில், காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்பட்டது என உயிரிழந்த விவசாயியின் மகன் தெரிவித்துள்ளார்.

குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதை காவல்துறை தடுக்காமல் இருந்ததை எப்படி திரு.ஸ்டாலின் எப்படி நியாயப்படுத்த முடியும்? ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் “அங்கொன்றும் இங்கொன்றுமாக” கொலைகள் நடக்கவில்லை. “எங்கும் கொலை, எப்போதும் கொலை” தான் நடக்கிறது. நீங்கள் ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும்!

மேற்கூறிய வழக்குகளில் குற்றம் இழைத்தோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொம்மை முதல்வரின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். தனது ஆட்சியின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் திமுக அரசு, இருக்கும் கொஞ்ச நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : NDA கூட்டணியில் சேர விஜய்க்கு பாஜக நெருக்கடி..? பவன் கல்யாண் மூலம் துணை முதல்வர் பதவி ஆஃபர்..! ஆனால் நயினார் இப்படி சொல்றாரே..!

RUPA

Next Post

ஈரானில் கருப்பு மழை..! போர் அமில மழையை ஏற்படுத்துமா..? அதன் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா..?

Mon Mar 9 , 2026
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே போர் தொடங்கி 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், பிப்ரவரி 7 அன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஈரானின் முக்கிய எரிபொருள் நிலையங்கள் மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது அதிரடித் தாக்குதலை நடத்தின. பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும். ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள மக்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் […]
tehran acid rain

You May Like