சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி விட்டது.. இது ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60%-க்கும் மேல் அதிகமாகும்.. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் சர்வதேச எண்ணெய் சந்தைகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.. பெட்ரோல் டீசல் விலையை இப்போதைக்கு உயர்த்தும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 21 நாட்கள் என சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.. இந்த சூழலில் அதை 25 நாட்களாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர்கள் கையிருப்பு எவ்வளவு உள்ளது? தேவை எவ்வளவு என்பது குறித்து உடனடியாக இன்று மதியத்திற்கு விவரம் அளிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் போர் சூழலில் கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.. தலைமை செயலாளர் தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
Read More : தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் எப்போது..? இந்த தேதியில் அறிவிப்பு வெளியாகும்..? பரபரப்பு தகவல்..!



