சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் அமைதுள்ளது. இந்த நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் இந்த அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மண்ணெண்ணெய் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடி உள்ளனர்.. அலுவலக ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்தறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்..
சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பர அலுவலகத்தில் சிசிடிவி காட்சிகள் இல்லாததால், அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.. மேலும் தடங்களை சேகரித்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்..
Read More : திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்..! மெசேஜ் அனுப்ப முடியாமல் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி..!



