சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தவெக உருவெடுத்துள்ளது.. முதல் தேர்தலிலேயே 108 இடங்களை தவெக வென்றது.. எனினும் தவெக ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காததால் மற்ற கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
5 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.. மேலும் திமுக கூட்டணியில் உள்ள விசிக, சிபிஐ, சிபிஎம் தலா 2 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளனர்.. இந்த கட்சிகளிடமும் ஆதரவு கோரி தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்..
இதனிடையே நேற்று ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய் ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.. எனினும் 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் அர்லேகர் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
இதுவரை ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.. இதனால் இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் திட்டமிட்டப்படி பதவியேற்பு விழா நடைபெறவில்லை..
இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரை இன்று மீண்டும் விஜய் சந்தித்தார்.. ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத நிலையில் மீண்டும் ஆளுநரை சந்தித்துள்ளார்.. 2-வது முறையாக விஜய் ஆளுநரை சந்தித்த நிலையில் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பாரா அல்லது பெரும்பான்மை இல்லை என்று கூறி மேலும் காலம் தாழ்த்துவாரா என்பதில் குழப்பம் நீடிக்கிறது..
Read More : விஜய் முதலமைச்சராக பதவியேற்பது தான் சரி.. ஆளுநர் இதை செய்ய வேண்டும்..! திருமா சொன்னத கவனிச்சீங்களா..



