fbpx

உடல் எடையை குறைக்க இந்த 6 பழங்களை கண்டிப்பாக சாப்பிடுங்க போதும்.!?

பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உடல் எடை அதிகமாக இருப்பது பலருக்கும் பிரச்சனையாக இருந்து வருகிறது. உடல் எடை அதிகமாவதால் உடலில் பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன. உடல் எடையை குறைப்பதற்கும் பல்வேறு வகையான வழிமுறைகள் இருந்து வந்தாலும் ஒரு சிலருக்கு அதனை பின்பற்ற முடியவில்லை.  அப்படிப்பட்டவர்கள் இந்த 6 பழங்களை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

1. ஆப்பிள் –  நீர் சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆப்பிளை தினமும் காலையில் உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கும். உடல் எடையும் குறையும்.
2. பெர்ரி பழவகைகள் – தினமும் உணவு உண்பதற்கு முன்பாக பெர்ரி பலவகைகளான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, கிரான் பெர்ரி, நெல்லிக்காய் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும். அதிக அளவு உணவு உட்கொள்வதை கட்டுப்படுத்தும்.
3. சிட்ரஸ் பழங்கள் – சிட்ரஸ் அமிலம் அதிகம் கொண்டுள்ள பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி போன்ற பழங்களை சாறாகவோ, பழங்களாகவோ சாப்பிடுவது பசியை கட்டுபடுத்த செய்கிறது. மேலும் ஆரஞ்சு பழம் போலவே இருக்கும் கிரேப் பழம் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
4. பேரிக்காய் – இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் என்ற வேதிப்பொருள் இருப்பதால் இன்சுலின் சுரப்பை சீராக்கி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.
5. தர்பூசணி – நீர்ச்சத்து, நார் சத்து நிறைந்துள்ளதால் நீண்ட நேரம் பசியெடுக்காமல் கட்டுப்படுத்தும். இதனால் உடல் எடையும் குறையும்.
6. அவகொடா – கொழுப்பு பழம் என்று அழைக்கப்படும் அவக்கொடா பழம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்று பலர் கருதி வருகின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. இந்த பழத்தில் கொழுப்பு சத்து இருந்தாலும் அது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க பெரிதும் உதவுகிறது.

Rupa

Next Post

நம்ம ஊரு குப்பையில் வளரும் அமெரிக்கா மூலிகை செடி.. என்னென்ன நன்மைகள் உள்ளது தெரியுமா.!?

Sun Feb 11 , 2024
பொதுவாக நம் தமிழ்நாட்டில் பல வகையான மூலிகைச் செடிகள் வளர்ந்து வருகின்றன. அவற்றை பண்டைய காலத்தில் நம் சித்தர்களும் மருந்தாக பயன்படுத்தி பல்வேறு நோய்களை குணப்படுத்தியுள்ளனர். தற்போது ஆயுர்வேத மருத்துவ முறைப்படியும், சித்த வைத்திய முறைப்படியும் இந்த மூலிகை செடிகளையே பெரும்பாலும் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் குறிப்பாக மூக்குத்தி பூ செடி என்று அழைக்கப்படும் செடியில் நோய்களை தீர்க்கும் பண்புகள் இருக்கின்றன என்று நம் சித்தர்கள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய […]

You May Like