Flash : அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்..! வெயிட்டான பொறுப்பு வழங்கும் இபிஎஸ்..!

eps kaliyammal

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக இருந்தவர் காளியம்மாள்.. கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார்.. எனினும் அக்கட்சி ஒருங்கிணைப்பளர் சீமான் உடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார்.. தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களால் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.. மேலும் தமிழ் தேசிய கொள்கைக்கான அரசியல் பயணமாக தனது பயணம் இருக்கும் என்று தெரிவித்தார்..


இந்த நிலையில் காளியம்மாள் அதிமுகவில் இணைந்தார்.. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் அவரை சந்தித்த காளியம்மாள் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.. வரவிருக்கும் தேர்தலில் காளியம்மாவுக்கு சீட் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சமீப காலமாக அவர் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் இன்று அதிமுகவில் இணைந்தார்..

RUPA

Next Post

எல்பிஜி தட்டுப்பாட்டிற்கு மத்தியில் கூடுதலாக ‘கேஸ் கட்டணம்’ விதிக்கும் ஹோட்டல்கள்.. வாடிக்கையாளர்கள் கொந்தளிப்பு..!

Fri Mar 13 , 2026
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.. பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சில ஹோட்டல்கள் மின்சார அடுப்புகளுக்கும், விறகு அடுப்புகளுக்கும் மாறி உள்ளன.. எனினும் சில ஹோட்டல் உரிமையாளர்கள் LPG சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் மத்திய கிழக்கு மோதல்களைப் பயன்படுத்தி தங்கள் லாபத்தை அதிகரிக்க முயற்சிக்கின்றன.. பெங்களூருவில் உள்ள பல ஹோட்டல்கள் வாடிக்கையாளர் பில்களில் கூடுதல் “கேஸ் கட்டணம்” என்பதை சேர்க்கத் தொடங்கியுள்ளன, […]
hotel bill

You May Like