தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்து வந்த பல தலைவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளனவர்.. அப்படிப்பட்ட தலைவராக ஒருவராக தான் சசிகலா உள்ளார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தின் முதல்வராகலாம் என்ற எண்ணத்துடன் இருந்த அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார்..
சிறை தண்டனை முடிந்த திரும்பிய சசிகலா தமிழக அரசியல் குறிப்பாக அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை ‘அதிமுக ஒன்றிணைய வேண்டும்’ என அவர் மேற்கொண்ட எந்த முயற்சிக்கும் இபிஎஸ் சம்மதிக்கவில்லை.. மேலும் எக்காரணம் கொண்டும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று இபிஎஸ் திட்டவட்டமாக கூறிவிட்டார்..
இத்தனை ஆண்டுகள் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பொறுமை காத்து வந்த அவர் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.. கடந்த மாதம் 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளன்று தனது கட்சிக்கான கொடியை சசிகலா அறிமுகம் செய்தார்..
இந்த நிலையில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழம் என்ற கட்சியில் சசிகலா இணைந்துள்ளார். தொண்டர் ஆரம்பித்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதாக சசிகலா தெரிவித்துள்ளார்.. இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ தொண்டர் ஆரம்பித்த கட்சியில் தன்னை இணைத்து கொண்டவர் எம்.ஜி.ஆர். அந்த வழியில் நானும் தொண்டர் ஆரம்பித்த கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது.
வரும் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவோம்.. எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு எந்த எண்ணமும் எனக்கு கிடையாது.. நான் மக்களோடு இருப்பேன் என்பதற்கு இந்த சின்னமே ஒரு சான்று.. இது மக்களின் சின்னம். வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்செரியில் அ.இ.பு.த.ம.மு.க கட்சி போட்டியிடும்.. நிச்சயமாக தமிழ்நாடு மக்கள் எங்களுடன் இருப்பார்கள்.. நாங்கள் தனிமரமாக வரவில்லை.. தோப்போடு தான் வந்துள்ளோம்.. எங்கள் தொண்டர்களும், மக்களுடன் எங்களுடன் இருப்பார்கள். தேர்தலில் ஒரே கருத்துடைய கட்சிகள் இணைந்து செயல்படுவோம்…” என்று தெரிவித்தார்..
Read More : விஜய் உடன் ஒன்றாக சென்றதால் சர்ச்சை.. செய்தியாளர்கள் கேள்விக்கு த்ரிஷாவின் ரியாக்ஷன் இதுதான்..!



