கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார்.
விஜய்யிடம் சுமார் 12 மணி நேரங்களுக்கு மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. இந்த விசாரணையில், 7 மணி நேரம் தாமதமானது ஏன்? கூட்ட நெரிசல் பற்றி தெரியாதா உள்ளிட்ட கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பினர்.. எனினும் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியது காவல்துறை தான், போலீசாரின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே வாகனத்தை இயக்கியதாகவும் விஜய் கூறியிருந்தார்..
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே 2 முறை விஜய் ஆஜரான நிலையில் தற்போது சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.. அதன்படி மார்ச் 10 விஜய் மீண்டும் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டள்ளது. எனினும் விஜய் அன்றைய தினம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவில்லை.. திட்டமிட்ட வேறு அரசியல் பணிகள் இருப்பதால் விஜய் ஆஜராகமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கரூர் பெருந்துயரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக ஒருநாள் முன்னதாக விஜய் சற்று நேரத்திற்கு முன்பு டெல்லி புறப்பட்டார்.. டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற விஜய் தடுத்து நிறுத்தப்பட்டார். விமான நிலையம் உள்ளே சென்ற போது, சோதனை செய்யப்பட்டதில் கூர்மையான பொருள் இருந்ததால் விஜய் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.. விஜய் கொண்டுசென்ற கைப்பையில் கத்திரிகோல் இருந்ததால் விமானத்தில் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. விஜய்யை தடுத்து நிறுத்திய விமான நிலைய காவலர்கள் அவரை அமர வித்துள்ளதால் டெல்லி புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
விமானத்தில் பயணம் செய்யும் போது கத்திரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. எனவே விஜய் பையில் இருந்த கத்திரிகோலை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.. மேலும் சோதனைகள் முடிந்த பின்னர் விஜய் தனி விமானம் மூலம் சென்னை புறப்படுவார் என்று கூறப்படுகிறது..
Read More : நாளை அறிவிப்பு வெளியாகாது..! தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பதில் தாமதம்..? என்ன காரணம்..?



