Flash : வாரத்தின் முதல் நாளே குட்நியூஸ்.. தொடர் சரிவில் தங்கம் விலை.. வெள்ளி ரூ.4,000 குறைவு..!

gold jewelery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,710க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.4 குறைந்து ரூ.276க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.4,000 குறைந்து வெள்ளி ரூ. 2.76 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்ற ‘One Battle After Another’ படம்..! சிறந்த நடிகர், நடிகை யார்..? முழு லிஸ்ட் இதோ..!

RUPA

Next Post

FASTag வருடாந்திர பாஸ் கட்டணம் ஏப்ரல் முதல் உயர்வு: புதிய மாற்றங்கள், தகுதி, முக்கிய விவரங்கள்.. முழு விவரம் இதோ..!

Mon Mar 16 , 2026
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), 2026-27 நிதியாண்டு முதல் FASTag வருடாந்திர பாஸ் கட்டணத்தை மாற்றியமைக்க உள்ளது. இந்தக் கட்டணங்கள் ரூ.3,000-லிருந்து ரூ.3,075-ஆக உயர்த்தப்பட உள்ளது.. இந்தப் புதிய FASTag விதிமுறை ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். FASTag வருடாந்திர பாஸ் கட்டணத் திருத்தம், ‘தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகள், 2008’-ஐப் பின்பற்றியே மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் புதிய விதிகள் நடைமுறைக்கு வர ஒரு மாதத்திற்கும் குறைவான […]
fastag n

You May Like