தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தலை முதன்முறையாக சந்திக்க உள்ள தவெக என்.டி.ஏ கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளது.
தவெக கட்சி என்.டி.ஏ கூட்டணியில் இணையக்கூடும் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. டெல்லி பாஜக இந்த விஷயத்தில் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. முதலில் 60 தொகுதிகள் என்று பாஜக தரப்பு கூறியுள்ளது..
துணை முதல்வர் பதவியை விஜய் வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளாராக தன்னை அறிவிக்க வேண்டும் என்றும் விஜய் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய்யின் தவெகவை என்.டி.ஏ கூட்டணிக்கு இழுக்க பாஜக தீவிரமாக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் 45 தொகுதிகள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 51 சீட் வரை ஒதுக்க பாஜக முன் வந்துள்ளது.. தவெக தனித்து நிற்பது, மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவே உதவும் என்று விஜய்யிடம் பாஜக பேசியதாகவும் கூறப்படுகிறது.
எனவே திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தான் நோக்கம் எனில் கூட்டணிக்கு வர வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.. என்.டி.ஏ கூட்டணிக்கு செல்ல தவெக மாவட்ட செயலாளர்கள் மட்டுமின்றி மூத்த நிர்வாகிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. விஜய்யை கூட்டணிக்குள் எப்படியாவது கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி பாஜக தலைமை தீவிரமாக உள்ளது.. தமிழக பாஜக தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறினாலும் டெல்லி பாஜக தலைமை நேரடியாக விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்..
மேலும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் குற்றப்பத்திரிகையில் தனது பெயரை சேர்க்க கூடாது எனவும், ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக சென்சார் வழங்க வேண்டும் என்று விஜய் தரப்பில் டிமாண்ட் வைக்கப்பட்டதாம்.. இதுகுறித்து தொடர்ந்து பாஜக – தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். பாஜக தலைமையும் அதற்கு ஓ.கே சொன்னதாகவே கூறப்படுகிறது..
என்.டி.ஏ கூட்டணியில் இணைவது குறித்து தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளாராம்.. இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்து விஜய் முடிவெடுக்க உள்ளாராம்.. என்.டி.ஏ கூட்டணியில் தவெக இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது..



