தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது..
இதில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருந்த நிலையில், மேலும் கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது.. அதிமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது..
தனது 20 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் திமுக உடன் தேமுதிக கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை.. தேமுதிகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகளும் 1 ராஜ்ய சபா சீட்டும் வழங்க திமுக உறுதியளித்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி தேமுதிகவுக்கு 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.. தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் மாநிலங்களவை வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீட்டு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.. அதன்படி, திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், கொமதேக கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முறை கூடுதல் கட்சிகள் இணைந்துள்ளதால் அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதிகளை குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த வகையில் தேமுதிகவுக்கும் 6 தொகுதிகளை வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாம்.. இதனால் தேமுதிக கடும் அப்செட்டில் இருக்கிறதாம்.. இந்த தேர்தலில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் 6 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் என்றும் திமுக தலைமை கூறுகிறதாம்..
Read More : EX.அதிமுக அமைச்சர்கள், இபிஎஸ் உறவினர் உள்ளிட்ட 7 பேர் மீது ED வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.. திமுக MP மனு..!



