கை மாறும் தலைநகரம்.. சென்னையை கைப்பற்றும் தவெக.. 16 தொகுதிகளில் முன்னிலை..!

vijay 1

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தலைநகரமான சென்னையில் அரசியல் சமநிலை முற்றிலும் மாறும் வகையில் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது. ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட சென்னையின் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15-இல் திமுகவும், 1 தொகுதியில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் வெற்றி பெற்றிருந்தன. அதிமுகக்கு ஒரே ஒரு இடமும் கிடைக்காத நிலை இருந்தது. ஆனால், இம்முறை நிலைமை முற்றிலும் மாறும் சூழல் உருவாகியுள்ளது.

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை இந்த தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. தேர்தலுக்கு முன்பே சென்னையில் திமுக – தவெக இடையே கடுமையான போட்டி நிலவும் என கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.

ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவுக்குப் பிறகு இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்ப கட்டத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே போட்டி இருந்தாலும், பின்னர் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. மதியம் 1 மணி நிலவரப்படி தவெக 102 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திமுக 67 இடங்களிலும், அதிமுக 63 இடங்களிலும் முன்னிலை வகித்தன.

இதில் முக்கியமாக, சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய தலைவர்களான முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, அண்ணா நகர் சிற்றரசு உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளிலும் கடும் பின்னடைவு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் இறுதி முடிவுகள் வரை எந்த மாற்றமும் ஏற்படலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், சென்னையில் தவெக முன்னிலை அரசியல் அரங்கில் புதிய மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

Read more: விஜய் வீட்டுக்கு முன் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.. உச்சக்கட்ட பரபரப்பில் தமிழ்நாடு..!

English Summary

The capital city is changing hands.. TVK will capture Chennai.. Leading in 16 constituencies..!

Next Post

விஜய்க்கு மெஜாரிட்டி கிடைக்கலன்னா தவெகவுக்கு ஆதரவா..? அதிமுக மூத்த தலைவர் பதில்..!

Mon May 4 , 2026
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.. காலை முதலே விஜய்யின் தவெக முன்னிலை பெற்று வரும் நிலையில், அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தால் அதிமுக ஆதரவு அளிக்குமா என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பதில் அளித்தார்.. இந்த நிலையில் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது பேசிய அவர் ” தவெகவை பொறுத்தவரை கணக்கை துல்லியமாக போட்டு […]
eps vijay 1

You May Like