டெல்லியில் அதிமுக தொகுதி பங்கீட்டு டீல் முடிந்தது..! எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட்..?

admk eps ttv

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 10 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.. இதில் அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிட்டது.. பாமக மாம்பழம் சின்னத்தில் 23 தொகுதிகளிலும், பாஜக தாமரை சின்னத்தில் 20 தொகுதிகளில் போட்டியிட்டன..


ஆனால் த.மா.க, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பசும்பொன் தேசிய கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரம் ஆகிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டன.. ஆக மொத்தம் 191 பேர் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக,, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.. புதிய தமிழகம் கட்சி உடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது..

இந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார்.. அப்போது தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷா உடன் ஆலோசனை நடத்தினார். மேலும் கூட்டணி கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிடுமா அல்லது அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இறுதியாக அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது..  இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் அழைப்பின் பேரில், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இன்று டெல்லி சென்றுள்ளனர்.

டெல்லியில் இருந்து வெளியான தகவல் படி அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட்..?

அதிமுக – 162

பாஜக – 31

பாமக – 17

அமமுக – 9,

த.மா.க – 4

இந்திய ஜனநாயக கட்சி -2

புதிய நீதிக்கட்சி – 2

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் – 2

பார்வர்டு பிளாக் – 1

பெருந்தலைவர் மக்கள் கட்சி – 1

புரட்சி பாரதம் – 1

இந்த 2026 தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில் 163 பேரும், தாமரை சின்னத்தில் 41 பேரும் களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Read More : திடீர் ட்விஸ்ட்..! திமுக கூட்டணியில் இருந்து மா.கம்யூனிஸ்ட் வெளியேறுகிறதா..? பரபரப்பு தகவல்..!

RUPA

Next Post

Breaking : வாகன ஓட்டிகளுக்கு ஷாக்..! பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.35 வரை உயர்வு..! உடனடி அமலுக்கு வரும் என அறிவிப்பு..!

Fri Mar 20 , 2026
மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமையன்று, பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2.35 வரை உயர்த்தி உள்ளன.. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (BPCL) ‘Speed’, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (HPCL) ‘Power’ மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (IOCL) ‘XP95’ ஆகிய பெட்ரோல் வகைகளின் […]
IOC e1615225925787 1

You May Like