ஜெம் வீரமணி வழக்கில் அடுத்த அதிர்ச்சி..!! தனது உதவியாளரை 13 வயதிலேயே சீரழித்த கொடூரம்..!! வளர்ந்த பின் புரோக்கர்..!!

Gem Veeramani 2026 1

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏழை சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய புகாரில், பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த 60 வயதான அவரது பெண் உதவியாளர் சாந்தி என்பவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


கைதான சாந்தியிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. கடந்த 1980-களில் சாந்திக்கு வெறும் 13 வயதாக இருந்தபோதே, தொழிலதிபர் வீரமணி ஆசைவார்த்தைகள் கூறி அவரை பாலியல் ரீதியாக சீரழித்துள்ளார். காலப்போக்கில் அந்த சூழலிலேயே வளர்ந்த சாந்தி, பின்னர் வீரமணிக்கே முழுநேர உதவியாளராக மாறியுள்ளார். தொடர்ந்து, தனது கணவர் மகேந்திர சிம்ஹனுடன் கைகோர்த்துக் கொண்டு, வறுமையில் வாடும் ஏழை குடும்பங்களை சேர்ந்த அப்பாவி சிறுமிகளை குறிவைத்து வீரமணிக்கு விருந்தாக்கும் புரோக்கராகவும் அவர் உருவெடுத்துள்ளார்.

புரோக்கர்கள் மூலம் அழைத்து வரப்படும் ஏழைச் சிறுமிகளை தனக்கு சொந்தமான பங்களாக்கள், அலுவலகங்கள் மற்றும் சொகுசு இல்லங்களுக்கு வரவழைத்து, அவர்களை அடித்து துன்புறுத்தி மிரட்டி வந்துள்ளனர். பின்னர், அச்சிறுமிகளை தொழிலதிபர் வீரமணி மற்றும் தனது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரின் பாலியல் இச்சைகளுக்கு பலவந்தமாக பலியாக்கியதும் தெரியவந்துள்ளது. பல ஆண்டுகளாக தொடர்ந்து அரங்கேறி வந்த இந்த கொடூர பாலியல் வலைப்பின்னல் குறித்த கூடுதல் ஆதாரங்களை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : தவெக வேட்பாளர்களை விரட்டியடிக்கும் மக்கள்..!! தேர்தல் கமிஷனை நாடும் அமைச்சர்கள்..!! சூடுபிடிக்கும் களம்..!!

Next Post

விளையாட்டுப் பிள்ளைகள் நடத்தும் அரசு..! நெல்மணிகளை மழையில் நனையவிட்டு வேடிக்கை பார்ப்பதா? எடப்பாடி பழனிசாமி விளாசல்..!

Tue Sep 22 , 2026
தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பல லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதை தடுக்க தவறிய தவெக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அனுபவமற்ற விளையாட்டுப் பிள்ளைகளால் வழிநடத்தப்படும் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில், விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னல்கள் சொல்லி மாளாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக விமர்சித்துள்ளார். டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் […]
Eps Vijay 2026

You May Like