தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு.. கைதான முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்..!

tuticorin girl case

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 11-ம் தேதி மாலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்..


வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் தந்தை சுப்புராஜ் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகார் அளித்தார்..

போலீசார் மாணவியை தேடி வந்த நிலையில், 12-ம் தேதி மாலையில் புதன்கிழமை மாலையில் வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம், உடலில் காயங்களுடன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலிசார் மாணவியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இதுதொடர்பாக விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

குற்றவாளியை கைது செய்யும் வரை மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி உறவினர்களும் கிராம மக்களும் போராட்டம் நடத்தினர்.. அதன்படி கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.. குற்றவாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது..

இந்த நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாயல்குடியை சேர்ந்த முனீஸ்வரன் என்ற 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.. செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்த போது அதன் அடிப்படையில் முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீசாரால் கைது செய்யபப்ட்ட முனீஸ்வரன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம் முனீஸ்வரன் ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்தவர் ஆவார்.. இன்று காலை வயிற்று வலி காரணமாக முனீஸ்வரன் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..

இந்த நிலையில் தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. முழு உடல் பரிசோதனைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 14 நால் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது. மீண்டும் ஏப்ரல் 2-ம் தேதி தர்ம முனீஸ்வரனை ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More : டெல்லியில் அதிமுக தொகுதி பங்கீட்டு டீல் முடிந்தது..! எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட்..?

RUPA

Next Post

மேஷ ராசியில் நுழையும் சுக்கிரன்.. இந்த 6 ராசிகளுக்கு ராஜ யோகம்..! பணம் கொட்டப் போகுது..!

Fri Mar 20 , 2026
காதல், திருமணம், ஆடம்பரம், கேளிக்கை, மகிழ்ச்சி, இன்பம், பகட்டு மற்றும் அலங்காரம் போன்ற வாழ்க்கையின் முக்கிய அம்சங்களுக்குக் காரகனாகத் திகழும் சுக்கிரன், இம்மாதம் 26-ஆம் தேதியன்று தனது உச்ச வீடான மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.. செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசியானது சுக்கிரனுக்கு ஒரு சாதகமான இடமாக இல்லாவிட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இது ‘ராஜ யோகங்களையும்’, ஆடம்பரமான வாழ்க்கையையும், மகிழ்ச்சியையும் வழங்கும். ஏப்ரல் 19 வரை […]
horoscope zodiac

You May Like