ஈரான் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி.. ரம்ஜானுக்கு வாழ்த்து.. தாக்குதல்களுக்கு கண்டனம்..!

modi iran president

ஈரான் மற்றும் அமெரிக்கா (US) — இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையிலான மோதல்களால் பதற்றம் தொடர்ந்து நிலவி வரும் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.. அப்போது ஈரான் பிரதமருக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட அவர், மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுமாறு வலியுறுத்தினார்.


இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “ஜனாதிபதி டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசி, ஈத் மற்றும் நவ்ரூஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். இந்தப் பண்டிகைக் காலம் மேற்கு ஆசியாவிற்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் என்று நாங்கள் நம்பிக்கை தெரிவித்தோம்..” என்று தெரிவித்துள்ளார்.

பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைப்பதாகவும் உள்ள, பிராந்தியத்தின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தேன்,” என்று கூறிய பிரதமர் மோடி, அதிகரித்து வரும் பதட்டங்களின் தாக்கம் குறித்து இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள கவலையை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

உலகளாவிய வர்த்தகம், குறிப்பாக முக்கிய கடல்வழிப் பாதைகள் வழியாக, தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மோடி வலியுறுத்தினார்.

“கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், கப்பல் வழித்தடங்கள் திறந்தும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதையும் மீண்டும் வலியுறுத்தினேன்,” என்று அவர் கூறினார்.

8 நாட்களுக்குள், பிரதமர் மோடி அதிபர் பெசெஷ்கியனுடன் பேச்சுவார்த்தை நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.

Read More : ‘போர் நிறுத்தம் இல்லை..’: போரை நிறுத்தப் போவதாக டிரம்ப் கூறிய நிலையில், ஈரான் எச்சரிக்கை..!

RUPA

Next Post

சனி-சுக்கிர சேர்க்கை: 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிய கிரகச் சேர்க்கை..! இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத ஜாக்பாட்..!

Sat Mar 21 , 2026
மார்ச் 26 அன்று, சனி மற்றும் சுக்கிரன் ஆகிய கோள்களின் அரிய சேர்க்கை ஒன்று நிகழவுள்ளது. ஜோதிடத்தின்படி, இவ்விரு கோள்களும் ஒரே ராசியில் இணைவது மிகவும் அரிதான நிகழ்வாகும். இம்முறை, இந்த மகத்தான சேர்க்கையானது ‘மீன’ ராசியில் உருவாகி, ஒரு சிறப்பான ‘யோகத்தை’ ஏற்படுத்துகிறது. இந்த தாக்கம் மார்ச் 26 வரை நீடிக்கும். இந்தக் கோள் சேர்க்கையானது பன்னிரண்டு ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக மூன்று ராசிகளைச் சேர்ந்தவர்கள் அற்புதமான […]
zodiac signs

You May Like