Breaking : வாரத்தின் முதல் நாளே குட்நியூஸ்..! தங்கம் விலை ரூ.5,360 குறைந்தது.. வெள்ளி ரூ.15,000 சரிவு..!

jewels

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று ஒரு கிராமுக்கு ரூ.670 குறைந்து ரூ.12,950க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து ரூ.1,03,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக கடந்த 10 நாட்கள் தங்கம் விலை குறைந்து வந்தது.. குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் ரூ.7000க்கு மேல் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.15 குறைந்து ரூ.235க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ. 15,000 குறைந்து வெள்ளி ரூ. 2.35 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : தீவிரமடையும் போர்.. “ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம்..” மிரட்டிய டிரம்புக்கு ஈரான் எச்சரிக்கை..!

RUPA

Next Post

உள்நாட்டு விமானக் கட்டண உச்சவரம்பை திரும்பப் பெற்ற மத்திய அரசு.. முழு விவரம் இதோ..!

Mon Mar 23 , 2026
உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீது தற்காலிக உச்சவரம்புகளை விதித்து 3 மாதங்களுக்கும் மேலான நிலையில், அந்தக் கட்டுப்பாட்டை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் IndiGo விமானச் சேவையில் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, அரசாங்கம் இந்த உச்சவரம்புகளை விதித்திருந்தது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி, விமானக் கட்டண உச்சவரம்புகளை நீக்கும் நடவடிக்கை மார்ச் 23, 2026 முதல் நடைமுறைக்கு வரும். மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் […]
plane 4

You May Like