Flash : குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.5000 சரிவு.. இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி விலை..!

jewel 1

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,15,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.14,480-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,15,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.285க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2.85 லட்சத்திற்கு விற்பனையாகிறது. சென்னையில் கடந்த 5 நாட்களாக வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது..

Read More : முதலில் ஆதவ்.. இப்ப விஜய்.. தலைமை செயலகமா..? இல்ல தவெக அலுவலகமா..? கொந்தளித்த வானதி சீனிவாசன்..!

English Summary

In Chennai today, the price of ornamental gold has dropped by Rs. 160 per sovereign and is being sold at Rs. 1,15,480.

RUPA

Next Post

வாக்குக்கு ரூ.2000 பணம் கொடுத்தோம்.. ஓபனாக பேசிய தவெக வேட்பாளர்.. பரபரப்பு..

Thu Jun 4 , 2026
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய், 9 […]
tvk candidate

You May Like