பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கியது ஏன்..? பாமவுக்கு குறைத்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்..!

eps anbumani 2

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. 


2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக,, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.. இந்த நிலையில் என்.டி.ஏ கூட்டணியில் இதுவரை 3 தொகுதிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. அதன்படி பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கபப்ட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது பாஜகவுக்கு 7 தொகுதிகள் அதிகம், அதே போல் பாமகவுக்கு 5 தொகுதிகள் குறைவு.. ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இரண்டாக பிளவுபட்டதே காரணம் என்று கூறப்படுகிறது..

அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3, புதிய நீதிக்கட்சிக்கு 2, இந்திய ஜனநாயக கட்சிக்கு 2, புரட்சி பாரதம் கட்சிக்கு 1, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 1, பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு 1 தொகுதி என தொகுதிகள் வழங்கப்பட உள்ளது..

இந்த சூழலில் இபிஎஸ், பியூஷ் கோயல், அன்புமணி, டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது பாமகவுக்கு குறைத்து, பாஜகவுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கியது ஏன் என்ற கேள்விக்கு அப்படி, எல்லாம் ஒன்றும் இல்லை என்று இபிஎஸ் பதில் அளித்துள்ளார்.. அனைத்து கட்சிகளுடன் இணக்கமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின் தான் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்..

RUPA

Next Post

மத்திய கிழக்கில் முடிவுக்கு வரும் போர்..? அசாரமல் அடிக்கும் ஈரான்..! திடீரென பின்வாங்கிய டிரம்ப்..!

Mon Mar 23 , 2026
கடந்த மாதம் 28-ம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கின.. இந்த தாக்குதல் ஈரானின் உச்சதலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.. எனினும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.. அதுமட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து […]
donald trump iran

You May Like