Covid19-க்குத் தயாரானதுபோல் மேற்காசிய போரின் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறயதை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா?
Covid19-க்குத் தயாரானதுபோல் மேற்காசிய போரின் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் மாண்புமிகு பிரதமர்.
11/03/2026 : போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனேயே, அதன் தாக்கங்களை உணர்ந்து, அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்.. மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் எனத் தங்களுக்குக் கடிதம் எழுதினேன்.
12/03/2026 : நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது.
14/03/2026 : தங்களது மாநில நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு, உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம்!
MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்! தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை. உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் அவர்கள் விற்பனை செய்ய அனுமதி. உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வோம்.
அப்போதே கேட்டேன்: மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? அப்போதும் பதில் இல்லை.
15/03/2026 : தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களே அறிவுரை வழங்குகிறார்கள்.மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன், அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
மேற்காசியப் போரின் தாக்குதல்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்:
“எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர வெடிப்பு..! கட்டுங்கடங்காத தீ..! பதற வைக்கும் வீடியோ..!



