தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..
திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், கொமதேக கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் – விசிக தலைவர் தொல் திருமாவளவன் கையெழுத்திட்டனர்.. விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட 8 தொகுதிகளில் 6 தனி தொகுதி, 2 பொது தொகுதிகள் ஆகும்..
கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது..
Read More : NDA கூட்டணியில் அமமுக போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன..? உத்தேச பட்டியல் வெளியானது..!



