தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. சென்னை, கோவையில் தலா 3 தொகுதிகளை பாஜக கோரிய நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னையில் மயிலாப்பூர், கோவை வடக்கு மட்டும் வழங்கி உள்ளார்.. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற 4 தொகுதிகளில் 2 தொகுதிகள் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன..
இந்த சூழலில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து நேற்று சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டார். எனினும் இந்த கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை..
இந்த நிலையில் பாஜக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.. கடந்த முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முதன்முறையாக சாத்தூர் தொகுதியில் களமிறங்குகிறார்..
கடந்த முறை கோவை தெற்கில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் இந்த முறை கோவை வடக்கில் களமிறங்க உள்ளார்.. மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்திரராஜன் களமிறங்குகிறார்..
பாஜக வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்
அமர்பிரசாத் ரெட்டி – தளி
மொடக்குறிச்சி – கிருத்திகா சிவகுமார்
எல்.முருகன் – அவிநாசி
ஏ.பி. முருகானந்தம் – திருப்பூர் தெற்கு
கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் – திருச்செந்தூர்
பொன். ராதாகிருஷ்ணன் – நாகர்கோவில்
எட்வின் ஜோஸ் – பத்மநாபபுரம்
விஜயதாரணி – விளவங்கோடு
அஸ்வத்தாமன் – திருவண்ணாமலை
கருப்பு முருகானந்தம் – தஞ்சாவூர்
ராமச்சந்திரன் – புதுக்கோட்டை
ஆனந்தன் அய்யாசாமி – வாசுதேவநல்லூர்
ஜி.பிஎஸ். நாகேந்திரன் – ராமநாதபுரம்
பிரேம்குமார் – ராசிபுரம்
தமிழிசை சவுந்தரராஜன் – மயிலாப்பூர்
அஸ்வின் – ஆவடி
வான சீனிவாசன் – கோவை வடக்கு
போஜ ராஜன் – உதகமண்டலம்
புரட்சி கவிதாசன் – கந்தர்வகோட்டை
சோழன் சி.த. பழனிசாமி – திருப்பத்தூர்
கவிதா ஸ்ரீகாந்த் – அறந்தாங்கி
ராம சீனிவாசன் – மதுரை தெற்கு
பாலகிருஷ்ணன் – ராதபுரம்
பண்ணைவயல் இளங்கோ – திருவாரூர்
பொன் பாலகணபதி – மானாமதுரை
இந்த உத்தேச பட்டியலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை.. தான் விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அண்ணாமலை அதிருப்தியில் இருக்கிறாராம்.. எனவே தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க அண்ணாமலை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது ஆதரவாளர்களிடம் வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதுதொடர்பாக தான் தேசிய தலைமைக்கு அவர் கடிதம் எழுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது.. எனவே வரும் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது..
Read More : “என் அம்மா, அக்கா, தங்கைகளை வாய்க்கு வந்தபடி பேசிய திமுக கைக்கூலி..” பொன்ராஜுக்கு விஜய் கண்டனம்..!



