“என் அம்மா, அக்கா, தங்கைகளை வாய்க்கு வந்தபடி பேசிய திமுக கைக்கூலி..” பொன்ராஜுக்கு விஜய் கண்டனம்..!

Ponraj Vijay

அரசியல் விமர்சகரும், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்காலமின் ஆலோசராக இருந்தவருமான பொன்ராஜ் சமீபத்தில் ஒரு யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர் தவெகவிஅ ஆதரிக்கும் பெண் தொண்டர்களை விபச்சாரிகள் என்று தரக்குறைவாக பேசியிருந்தார்.. மேலும் “ தமிழ்நாட்டில் இப்படி ஒரு தற்குறி கூட்டத்தை இருக்கு என்று காண்பித்து கொடுத்த விஜய்க்கு நன்றி சொல்ல வேண்டும்.. தறி கெட்டு போகும் தற்குறி கூட்டம், வரைமுறை இல்லாத தற்குறி கூட்டம், புருஷன் வேண்டாம், விஜய் தான் வேண்டும் என்று சொல்லும் தற்குறி கூட்டம், தங்கையாகவும் இருப்போம், பொண்டாட்டியாகவும் இருப்போம் என்று சொல்லக்க்கூடிய விபச்சாரிகள் நிறைந்த ரசிகைகள் கொண்ட தற்குறி கூட்டம் இங்க இருக்கு என்று உலத்திற்கு காண்பித்த விஜய்யை பாராட்ட வேண்டும்..” என்று கூறினார்..


அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.. தவெகவின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பொன்ராஜின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.” என்று தெரிவித்துள்ளார்.

Read More : 41 பேர் மரணத்தை பார்த்து வாகனத்தில் இருந்து ரசித்த விஜய் ஒரு மனிதப்பிறவியா..? சபாநாயகர் காட்டம்..!

RUPA

Next Post

தீவிரமடையும் போர்..! அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை..!

Thu Mar 26 , 2026
மேற்காசிய போர் நெருக்கடி 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், நாட்டின் தயார்நிலை மற்றும் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் (UT) முதலமைச்சர்களுடன் கலந்துரையாட உள்ளார்.. ‘டீம் இந்தியா’ (Team India) உணர்வின் அடிப்படையில், மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்வதில் இந்தக் கூட்டம் முக்கிய கவனம் செலுத்தும். எனினும், சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்கள், தேர்தல் […]
Pm Modi 4

You May Like